செவ்வாய், பிப்ரவரி 06, 2007
கர்நாடகத்தில் தமிழர்கள் விரட்டப்படுகின்றனர்.
மேட்டூர்: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, நிலவும் பதட்டம் மற்றும் அச்சம் காரணமாக கர்நாடகா வாழ் தமிழர்கள் தற்போது தமிழகத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் கிடைக்கும் நீரில் ஆண்டுதோறும் 270 டி.எம்.சி., நீரை பயன்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., நீரை விடுவிக்க வேண்டும் என காவிரி நடுவர் நீதிமன்றம் நேற்று இறுதித்தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு சாதகமாக நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியதால், கர்நாடகாவில் கடும் பதட்டம் நிலவுகிறது. கர்நாடகா மாநிலத்தின் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியில் பாதுகாப்புக்காக வெளிமாநில போலீஸார் குவிக்கப்பட்டும், கடும் பதட்டமும், அச்சமும் நீடிக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து 28 கி.மீ., துõரத்தில் தமிழக கர்நாடகா எல்லையில் உள்ள பாலாறு செக் போஸ்ட்டின் ஒரு பகுதியில் கர்நாடகா போலீஸாரும், மறு பகுதியில் தமிழக போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் நுழையும் தமிழக வாகனங்கள் மீது கன்னடர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், கர்நாடகாவுக்குள் பஸ்களை இயக்க வேண்டாம் என கர்நாடகா போலீஸார் தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால்,நேற்று மேட்டூரில் இருந்து பெங்களூரூ, மைசூரூ, கொள்ளேகால், மாதேஸ்வரன் மலை செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ன. மேலும், தமிழகத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூரூக்கு சென்ற தமிழக சுற்றுலா பயணிகளின் பஸ்களை கர்நாடகா போலீஸ் எல்லையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதுபோல், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல முயன்ற லாரி, வேன், ஜீப், இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும், கர்நாடகா போலீஸாரால் திருப்பி அனுப்பபட்டன.
அதுபோல், கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலையில் இருந்து தமிழகத்தில் உள்ள கோவிந்தபாடி கிராமத்துக்கு இயக்கப்படும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பஸ்ஸை தமிழகத்தின் எல்லையிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு குடும்பத்துடன் வந்த தமிழர்கள் அனைவரும், எல்லையில் இருந்து ஆறு கி.மீ., துõரத்தில் உள்ள கோவிந்தபாடிக்கு நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை தொடர்ந்து, பாலாறு முதல் மேட்டூர் அணை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேட்டூர் அணை மற்றும் பூங்காவுக்குள் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. சேலம் மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் மேட்டூரில் தங்கி இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். மேலும், கர்நாடகா எல்லைப்பகுதி மற்றும் மேட்டூர் அணை ஆகிய இடங்களுக்கு சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ""காவிரி தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள பதட்டம் தணியும் வரை பாதுகாப்பு நீடிக்கும்,'' என மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்தார். இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு காரணமாக, கர்நாடகாவில் பாதுகாப்பற்ற இடங்களில் வசிக்கும் தமிழர்கள், குடும்பத்துடன் தமிழத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். தமிழர்களை ஏற்றி வரும் கர்நாடகா பஸ்கள், தமிழக எல்லையிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால், தமிழக எல்லைக்குள் நுழையும் தமிழ் குடும்பங்கள் அங்கிருந்து ஆறு கி.மீ., துõரத்தில் உள்ள கோவிந்தபாடி கிராமத்துக்கு நடந்து வந்து பஸ் பிடித்து மேட்டூர் வழியாக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால், தமிழகத்தின் எல்லையான பாலாறு வரை தமிழக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என கர்நாடகா தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.dinamalar.com/
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக