TamilNet, Tuesday, 28 April 2009, 10:14 GMT]
The international community accusing the LTTE all this time for ‘inventing’ human bomb is testing a premeditated ‘genocide bomb’ on Tamils and sets new ‘guidelines’ for global order, says a political commentator, who contributes regularly to TamilNet. “Even though there are many actors, the final responsibility for the experiment and deployment of this worst possible weapon of human civilization squarely falls on Obama’s US administration and on Ban Ki Moon’s UN,” he said adding that they will go down in history for “calculatedly allowing one of the worst ethnic genocides of contemporary history to take its toll in the island of Sri Lanka, in the cruellest and deceitful way.”
Further observations by the commentator follow:
“The US takes the core responsibility by tilting the military and diplomatic balance in favour of genocidal Colombo and finally failing to act when the demon perpetrated by them devours the people.
“When genocide was the question, Hillary Clinton by talking ‘post-conflict’ Sri Lanka, indirectly signalled the genocide to take its course.
“The UN is accused of shielding a criminal government, of sitting on any move of intervention and of abetting capture, torture and indefinite imprisonment of Tamil civilians by genocidal Colombo.
“The UN refused to discuss the genocide in Sri Lanka. Even the civilian issue was ‘too sensitive’ for it. At every stage it wanted the capture of civilians by genocidal Colombo. But when the civilians were captured it was not there to guarantee them their freedom of movement. Many of them still languish completely in the hands of Sri Lanka Army.
“Sri Lanka president turned down the request of UN humanitarian chief John Holmes to have access to civilians outside the camps. The personal appeal of Moon for a humanitarian team to enter the so-called safety zone was also turned down by Colombo. It is obvious what role the UN is up to play in future in abetting the structural genocide of Tamils planned by Colombo.
“Many fail to give due importance to the role being played by Japan in funding genocidal Colombo at every stage. Besides there were China and Russia, which played calculated mischief.
“A shameful organized crime, for the first time in contemporary history, has been registered in the behaviour of the international media in abetting the genocide, and not covering it. Now they are busy in spinning yarns with the captured civilians.
“Meanwhile, Monday morning Colombo announced halting the use of heavy weapons on the ‘no-fire’ zone. But throughout the day and the night that followed it showered fire from all types of heavy weapons including aerial bombing.
“EU ministers timed their visit after the testing of the ‘genocide bomb’.
“Even then, Colombo said that one of them, the Swedish minister, is not want.
“Colombo, the Frankenstein Monster is now dictating terms to the IC. But the monster is set loose calculatedly.
“The international community is silent, issuing only statements to hoodwink.
“It is reliably learnt that India has set an agenda for Colombo to accomplish the massacre. Indian home minister Chidambaram’s statement on Sunday that the war will be over in 48 hours is an affidavit for the premeditated crime of the deployment of the ‘genocide bomb’.
“All evidences indicate that the ruling circles of the international community premeditated the testing of the ‘genocide bomb’ on Tamils.”
"இனப்படுகொலைக் குண்டைப்" பரீட்சித்து சரித்திரம் படைக்கும் சர்வதேச சமூகம்
தற்கொலைப் போராளிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியதாக இதுவரை காலமும் புலிகளைக் குற்றம் சொல்லி வந்த சர்வதேச சமூகம் இன்று தான் ஏற்கனவே முடிவுசெய்ததற்கேற்ப "இனப்படுகொலைக் குண்டை" தமிழர்கள் மேல் பரீட்சித்துப் பார்ப்பதோடு, புதிய உலக ஒழுங்கிற்கான விதிமுறைகளையும் நியமித்திருப்பதாக அரசியல் விமர்சகர் ஒருவர் தமிழ்நெட்டிற்கு தெரிவித்திருக்கிறார். இந்த இனப்படுகொலைக் குண்டு முயற்சியில் பங்குகொண்டவர் பலர் இருந்தாலும், மனித நாகரீகத்துக்கு எதிரான இந்தப் பரீட்சையின் உருவாக்கத்துக்கும், நடைமுறைப்படுத்தலுக்குமான முற்றுமுழுதான பொறுப்பு ஒபாமாவின் நிர்வாகத்திடமும், ஐ.நா வின் பான் கீ மூன் இடமுமே வந்து சேர்ந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். நவீன சரித்திரத்திலேயே மிகவும் கொடூரமான முறையிலும், உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவியும் நடைபெறும் இந்த மிலேச்சத்தனமான இனவழிப்புப் போருக்கு "திட்டமிட்ட" அனுமதியொன்றைக் கொடுப்பதன் மூலம், இவ்விருவரும் சரித்திரத்தில் இடம்பிடிக்கப்போகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.
அவரின் மேலும் சில அவதானிப்புகள் கீழே தரப்படுகின்றன.
"ராணுவ மற்றும் அரசியல் சமபலத்தை ஒரு அரக்கத்தனமான சிங்கள அரசிற்குச் சார்பாக சரியவிட்டதன் மூலமும் அத்துடன் இன்று அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அரக்கத்தனம் மக்களை கொன்று தின்று ஏப்பம் விடுவதை அனுமதித்ததன் மூலமும் இந்த கொடூரமான இனக்கொலையின் முழுப்பொறுப்பினையும் அமெரிக்காவே ஏற்க வேண்டும்".
"இனக்கொலையே இங்கு பிரதான கேள்வியாக" இருந்தபோது, "போருக்குப் பிந்திய நிகழ்வு" பற்றிக் கதைத்ததன் மூலம் கிலாரி கிளின்ரன் அவர்கள் இந்த இனக்கொலை தனது இலக்கினை அடைய வேண்டும் என்று மறைமுகமாக கோடிட்டுக் காட்டியத்தையே குறிக்கிறது".
"தமிழ்ச் சிவிலியன்கள் மீது சிங்கள இனக்கொலை அரசு நடத்தும் கைதுகள் சித்திரவதைகள், காலவரையற்ற சிறையடைப்புகளுக்கு எதிரான எந்தவித நடவடிக்கைகளையுமே தடுத்து நிறுத்தியன் மூலம் ஐ.நா போர்க்குற்றம் புரியும் ஒரு அரக்கத்தனமான் அரசாங்கத்திற்கு கவசமாக செயல்படுகிறது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
"இலங்கையில் நடக்கும் இனக்கொலையைப் பற்றி விவாதிக்க ஐ.நா மறுத்துவிட்டது. சிவிலியன்களின் இழப்பு அதற்கு "மிகுந்த கரிசணையை" ஏற்படுத்தியிருந்தாலும் கூட. ஒவ்வொரு தடவையும் தமிழ் மக்கள் அவர்களைக் கொன்றொழிக்கும் சிங்கள இனக்கொலையரசால் பிடிபடுவதையே ஐ.நா விரும்பியது. ஆனால் அவ்வாறு தமிழ்ச் சிவிலியன்கள் பிடிபட்ட போது அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு உறுதியளிக்க ஐ.நா அங்கு பிரசன்னமாகவில்லை. அவ்வாறு பிடிபட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் இனக்கொலை ராணுவத்தின் கைகளில் இன்னமும் அகப்பட்டு கட்டுண்டு கிடக்கிறார்கள் என்பதே உண்மை" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"வன்னியில் தடுப்புமுகாம்களுக்கு வெளியே இன்னும் சிங்கள ராணுவத்தின் கைகளில் அகப்பட்டிருக்கும் மக்களைப் பார்க்கவென ஐ.நா நிவாரண அதிகாரியான ஜோன் கோம்ஸின் வேண்டுகோளை சிறிலன்க்காவின் அதிபர் மகிந்த நிராகரித்திருக்கிறார். "பாதுகாப்பு வலயம்" எனப்படும் கொலைக்களத்துக்குள் அகப்பட்டிருக்கும் மக்களை சந்திக்க தனது நிவாரனக் குழுவை அனுமதிக்குமாறு ஐ. நா வின் பான் கீ முன் தனிப்பட்ட ரீதியில் விடுத்த வேண்டுகோளும் கொழும்பினால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதுலிருந்து புலப்படுவது என்னெவென்றால் நன்கு நெறிப்படுத்தப்பட்டு திட்டமிட்டு நடைபெறும் தமினத்திற்கெதிரான இனக்கொலையில் ஐ. நா வின் பங்கென்பது எந்த வகையில் இருக்கப் போகிறது என்பதைத்தான்".
"சிங்கள அரசு நடத்தும் இனக்கொலையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு ஜப்பான் வழங்கிவரும் நிதி உதவிக்கு முக்கியத்துவம் கொடுக்க எம்மில் பலர் தவறி விடுகின்றனர். ஜப்பானுக்குச் சமாந்தரமாக ரஷ்ஷியாவும், சீனாவும் இந்த இனக்கொலைப் போருக்கெதிரான கருத்துக்களையும், குற்றச்சாட்டுக்கலையும் தடுப்பதில் முன்னின்று உழைத்து வருகின்றன".
"நவீன சரித்திரத்திலேயே முதன்முறையாக ஒரு வெட்கக்கேடான திட்டமிடப்பட்ட கொடுஞ்செயல் சர்வதேச ஊடங்களில் வெளிக்கொணருவதற்கு மாறாக முற்றாக இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது அவர்கள் "பிடிபட்ட" தமிழர்கள் தொடர்பாக கதைகள் பின்னுவதில் மும்முரமாக இருக்கிறார்கள்".
"இதேவேளை கடந்த திங்கள் காலை தான் பாதுகாப்பு வலயத்தினுள் கனரக ஆயுதங்களின் பாவனையை நிறுத்தப்போவதாக கொழும்பு அறிவித்தது. ஆனால் அன்று நாள் முழுவதும், அன்றிரவும் தனது கனரக ஆயுதங்களைக் கொண்டு மழைபோல தாக்குதல் நடத்தியதுடன், மூர்க்கத்தனமான வான் தாக்குதலையும் அது நடத்தியது".
" ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சர்கள், "இனக்கொலைக் குண்டைப்" பரீட்சித்துப் பார்த்தபின் தமது வருகைக்கன நேரத்தைக் குறித்துக்கொண்டார்கள்".
"அதற்குப் பின்னரும் கூட, கொழும்பு அரசாங்கமானது அம்மூவரில் ஒருவரான சுவீடன் நாட்டமைச்சரைத் தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டது".
"பயமுறுத்தும் பூதமான கொழும்பு, இன்று சர்வதேசத்தினை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது. அதே சர்வதேச சமூகத்தால் அந்தப் பூதம் திட்டமிட்ட முறையில் இனக்கொலை புரியவென அவிழ்த்து விடப்படுகிறது".
"இன்றைக்கு சர்வதேச சமூகமானது ஏமாற்றுத்தனமான அறிக்கைகளை மட்டுமே அவ்வப்போது விட்டுக்கொண்டு அமைதியாக இருக்கிறது".
"தமிழர்க்கெதிரான இனக்கொலையை நடத்தி முடிப்பதற்குத் திட்டமிட்டுக் கொடுத்தது இந்தியாதான் என்று இன்று நம்பகமாக அறியப்பட்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய உள்த்துறையமைச்சர், சிதம்பரத்தின் அறிக்கையின்படி, போர் இன்னும் 48 மணித்தியாலங்களில் முடிந்துவிடும் என்பது, "இனக்கொலைக் குண்டு" எனப்படும் ஏற்கனவே திட்டமிட்ட கொடுஞ்செயலை செய்வதற்கான ஒப்புதல் அங்கீகாரமாகவே கருதப்பட வேண்டும்".
"எல்லா சாட்சியங்களும் ஒன்றைத்தான் கூறி நிற்கின்றன, அதாவது, சர்வதேசத்தின் அதிகார வட்டங்கள் ஏற்கனவே திட்டமிட்டதன்படி "இனக்கொலைக் குண்டை" தமிழர் மேல் பரீட்சித்துப் பார்ப்பதில் உறுதியாக இருக்கின்றன".
நன்றி தமிழ்நெட்
தமிழாக்கம் ரகுனாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக