வியாழன், ஏப்ரல் 30, 2009

ஆம் நாங்கள்தான் சிங்கள ராணுவத்தை வழி நடத்தினோம்- பிரணாப் முகர்ஜி பரபரப்பு ஒப்புதல்சிங்கள ராணுவத்திற்கும், தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு

பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது,

கடந்த வருடம் ஜனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது. சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் சிங்கள அரசுக்கு இந்திய உதவி செய்ததாக பத்திரிக்கையிலும், தமிழக அரசியல்வாதிகளும் கூறிவந்தனர்.

ஆனால் இதை டில்லி வாலாக்களும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்தனர். சில சமயங்களில் இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியான எ.கே.அந்தொனியும் இந்தியா சிங்கள ராணுவத்திற்கு உதவில்லை என்று கூறியிருந்தார். மேலும் இராணுவ அதிகாரிகள் தமிழகம் வரும் போதெல்லாம், ராணுவத்தை கொடுத்து உதவவில்லை என்று அறிக்கைவிட்டு சென்றனர். இந்த நிலையில் சிங்கள ராணுவத்தில் இந்திய வீரர்கள் உள்ள தகவலை பல ஆங்கில பத்திரிக்கைகள் வெளியிட்டன.

இதனை அடுத்து வெளியுறவு துறையும், பாதுகாப்பு துறையும் சேர்ந்து ஒப்பந்தபடி நாங்கள் ஆலொசனைகள் தான் வழங்கினோம், கனரக ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லி வந்தது. தற்சமயம் புலிகளை மிகவும் குறைந்த பரப்பளவிற்கு நெருக்கிவிட்டது. மேலும் உலக அளவில் நெருக்கடிக்கு இந்தியா, சிங்கள அரசாங்கம் இரண்டுமே ஆளாகிவிட்டது. இந்த ஒரு சூழ்நிலையில் சிங்கள் ராணுவத்தில் இந்தியாவின் பங்கு பற்றி என்.டி.டி.விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

சிங்கள அரசாங்கம் எங்களது நண்பர்கள், அவர்களுக்கு உதவ வேண்டியது எங்களது கடமை, மேலும் தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அடக்கும் பணியில் நாங்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உண்டு. போராளிகளால் இந்தியாவிற்கும் அச்சுறுத்தல்கள் உண்டு இதன் காரணமாக நாங்கள், ஆயுத உதவிகள் வழங்கி வந்தோம்.

இதனிடையில் புலிகளுக்கு சில அமைப்புகள் பெரிய அளவில் கனரக ஆயுதங்கள், மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது பற்றி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சிங்களராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதோடு, எங்களுக்கு(இந்தியாவிற்கும்) எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த காரணத்தினால் இந்தியா நேரடியாக போராளிகளுடன் போரிடவேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது.

நாங்கள் தீவிரவாத செயல்களை முடக்க ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த போரை வழிநடத்தினோம். ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமேரிக்க ராணுவம் மூக்கை நுழைக்கும் என்றால் நாங்கள் எங்கள் அருகில் உள்ள நட்பு நாட்டின் தீவிரவாத செயல்களை நிறுத்த தீவிர நடவடிக்கைகளில் ஏன் ஈடுபடக்கூடாது?

இவ்வாறு என்.டி.டி.விக்கு அளித்த ஒரு பேட்டியில் பிரணாப் முகர்ஜி சிங்கள போரில் இந்திய பங்கு பற்றி கூறினார்.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

கருத்துகள் இல்லை:

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us