வெள்ளி, பிப்ரவரி 15, 2008

தசாவதாரம்!!!



நடிகர் கமல்ஹாசன் 10 வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் தசாவதாரம். தீபாவளிக்கு வரும், பொங்கலுக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்துள்ள நிலையில் படத்தில் இறுதிகட்ட சூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. தற்போது கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இதனால் உலகம் முழுவதிலும் தசாவதாரத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி முதல் தசாவதாரம் திரையில் மின்னும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. கமல்ஹாசன் அதிக அளவில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ள இப்படத்தைப் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட் வருமாறு :

# தசாவதாரம் படத்தை இயக்குபவர் இஈயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
# தசாவதாரம் சமூகத்தின் மீது அக்கறைகொண்ட பொறுப்பான ஒரு மனிதனின் கதை.
# படத்தின் கதையை கிரேசிமோகன், சுஜாதா இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். கமலின் பங்கும் இதில் இருக்கிறது.
# புதுமையான இசையை புகுத்தியிருப்பவர் ஹிமேஷ் ரேஷ்மாச்சார்யா.
# கமல் 10 வேடங்களில் நடிப்பதால் அதிக அளவு கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
# பெரும்பாலான கிராபிக்ஸ் காட்சிகள் வெளிநாட்டு நிறுவனங்களால் செய்யப்படுகிறது.
# வெளிநாட்டு ரசிகர்களை கவர தசாவதாரத்தை ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியிட உள்ளனர்.
# படத்தில் பாரதி, வாசு, ஆ.சுந்தர்ராஜன், சவுந்தர், ரமேஷ்கண்ணா, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குனர்களும் நடித்துள்ளனர்.
# நடிகை அசின் தன் சொந்தக்குரலில் பேசி நடித்துள்ளார். இந்த படத்தில் அம்மணி அக்ரஹாரத்து பெண்ணாக வருகிறார்.
# தசாவதாரம் படத்தில் 2 கமல்கள் சண்டையிடும் காட்சி மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. இந்த காட்சிக்காக அமெரிக்காவில் இருந்து நவீன தொழில்நுட்ப கருவிகள் வரவழைக்கப்பட்டிருந்தன.
# சென்னை, மலேசியா, அமெரிக்கா, மற்றும் சிதம்பரத்தில் இப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன.
# படத்தில் 2 பாடல்கள் ரூ.3 கோடி செலவில் சென்னையில் படம்பிடிக்கப்பட்டது.
# கமலுக்கு ஜோடியாக அசின், மல்லிகா ஷெராவத், ஜெஈயப்பிரதா, கே.ஆர்.விஜயா, ரேகா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். நாகேஷ், நெப்போலியனும் முக்கிய கேரக்டர்களாக நடிக்கிறார்கள்.
# கமல்ஹாசனின் 10 வேட்களில் ஒன்று ஜார்ஜ் புஷ் வேடம்.
# ஜார்ர் புஷ் வேடம் பற்றி கமலிடம் கேட்டபோது, நான் நடித்த அந்த கேரக்டர் பற்றி இப்போதே சொல்வது நல்லதல்ல என்று கூறி மழுப்பி விட்டார்.
# புஷ் வேடம் தவிர ஆன்மீகவாதி, நீக்ரோ, வயதான தாத்தா, இளைஞர், பின்லேடன் உள்ளிட்ட வேடங்களிலும் கமல் கலக்கியிருக்கிறார்.
# ஆன்மீக கமலுடன் பத்தாயிரம் பக்தர்கள் பங்குபெறும் பிரம்மாண்டமான காட்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் படமாக்கப் பட்டுள்ளது
# வாலி மற்றும் வைரமுத்துவின் பாடல்கள் எழுதியுள்ளனர்.
# படம் திரைக்கு வரும்போது இந்தியாவில் மட்டுமல்லாது, அமெரிக்கா, கனடா ஆகிஈய நாடுகளிலும் விடுமுறை காலமாகும். எனவே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
# இந்த படம் நகைச்சுவை கலந்த கலகலப்பான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
# தசாவதாரம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிப்பதாகும். (மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மர், வாமணர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி ஆகியவையே விஷ்ணுவின் 10 அவதாரங்கள்).

ஆதாரம் தினமலர்

3 கருத்துகள்:

சகாதேவன் சொன்னது…

தசாவதாரம் பற்றி இத்தனை விபரம் சொன்னீர்களே, நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.
ராமர் தலை தீபாவளி கொண்டாடியது எங்கே,
அயோத்தியிலா? மிதிலையிலா? இல்லை காட்டிலா?

சொல்லுங்கள்.

சகாதேவன்.

-L-L-D-a-s-u சொன்னது…

ஆதாரம் தினமலர்
;)

வவ்வால் சொன்னது…

//ராமர் தலை தீபாவளி கொண்டாடியது எங்கே,
அயோத்தியிலா? மிதிலையிலா? இல்லை காட்டிலா?//

எங்கே இருந்துய்யா இது போல அறிவாளிங்க எல்லாம் கிளம்பி வரிங்க,இத்துப்போன கேள்வியை எல்லாம் கேட்டுக்கிட்டு :-))

ராமாயணம் , மகா பாரதம் எது முதலில் நடந்தது? பதில் தெரியுமா? தெரிஞ்சா அதில இருக்கு விடை?

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us