செவ்வாய், பிப்ரவரி 05, 2008

கோவில் இடிப்பு: மன்னிப்பு கேட்கும் மலேசியா!

மலேசியாவின் கிளாங் நகரில் உள்ள இந்துக் கோவிலை இடித்தது தவறு. அதற்காக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்பதாக மலேசிய துணைப் பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக் கூறியுள்ளார்.

மலேசியாவில், ஆளுங்கூட்டணி மீது தமிழர்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். இந்த அதிருப்தியின் விளைவு, வருகிற பொதுத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என்ற பயத்தில் ஆளுங்கூட்டணி உள்ளது. இதனால் தமிழர்களை சமாதானப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இதில் ஒரு பகுதியாக கிளாங்கில் உள்ள பழம்பெரும் இந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு மலேசிய துணைப் பிரதமர் ரஸ்ஸாக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கிளாங்கில் உள்ள கோவில் இடிக்கப்பட்டது, அதிலும் தீபாவளிக்கு முன்பு இடிக்கப்பட்டது தவறு என்பதை உணர்ந்துள்ளோம். அதற்காக மன்னிப்பு கோருகிறோம். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்றார் அவர்.

மலேசியாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடங்களில் சுமார் 24 ஆயிரம் இந்து கோயில்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தக் கோவில்கள் கட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
paraparappu.com

கருத்துகள் இல்லை:

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us