திங்கள், மே 28, 2007
பெண்கள் தண்ணி அடிக்கலாமா?
http://sayanthan.blogspot.com/2007/05/blog-post_27.html
தண்ணி அடிப்பதை பற்றி இங்கே ஒரு விவாதம நடக்கிறது, இது நகைச்சுவையாக இருந்தாலும், யோசிக்கவேண்டியவிடயம். என்னை பொறுத்தவரையும் விரும்பியவர்கள் அடிக்கலாம், விரும்பாதவர்கள் அடிக்காமல் விடலாம், ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. என்னவெனில் ஆண்கள் அடித்தால் இந்த சமுதாயம் பெரிதாக கண்டு கொள்வதில்லை, ஆனால் அதைபெண் செய்தால் பெரிதாக தூக்கிபிடிக்கிறது, அதன் பின்னர் அந்த பெண்ணுக்கு முன்னர்கிடைத்த மரியாதை கிடைக்குமா? அதற்கு முன்னர், அந்த கணவர் முதலில் அதற்கு அனுமதி கொடுப்பாரா?
பொதுவாக இந்த தண்ணி எனப்படும் அல்கஹோல் உடலுக்கு கேடானது. மனித உடலுக்கு தீங்கானது, அதை ஆண் செய்யும் போது ஒரு கண்ணோட்டத்திலும் பெண்செய்யும் போது வேறு கண்ணோட்டத்திலும் பார்ப்பது ஏன்? ஆணைவிட பெண் அச்செயலை செய்யும் போது, அது குடும்பத்துக்கும் ,சமுதாயத்துக்கும் அதிக கேட்டை தரக்கூடியாதா? அதனால்தான் இந்த ஆண் ஆதிக்கவாதிகள் பெண்களுக்கு கார் லைசன்ஸை கட்டாயமாக பழக்கிறார்களா?
"அளவாக அடித்தால் அதுவே மருந்து"
"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு"
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us
10 கருத்துகள்:
தாங்கள் குடித்தால் மனைவி ட்ரைவ் செய்வா என்ற எண்ணத்தில்த் தான் லைசென்சை எடுக்க சொல்கிறார்கள் என நான் நினைத்தேன். ஓ.. மனைவி குடிக்கக் கூடாதென்பதற்காகவும் லைசென்சை எடுக்க சொல்லுகிறார்களோ..:((
இதையே அவர்கள் மாற்றி செய்தால் எப்படி இருக்கும்? நினைத்துப்பார்கவே கலீச்சா இல்லையா?
//பெண்கள் தண்ணி அடிக்கலாமா? //
அதென்ன பெண்கள் தண்ணி அடிக்கலாமா?
ஆண்கள் அடிக்கலாம் என்றால் பெண்களும் அடிக்கலாம். தவறில்லை.
லக்கிலுக் hat gesagt...
//பெண்கள் தண்ணி அடிக்கலாமா? //
அதென்ன பெண்கள் தண்ணி அடிக்கலாமா?
ஆண்கள் அடிக்கலாம் என்றால் பெண்களும் அடிக்கலாம். தவறில்லை.
ஆண்பெண் சமத்துவம் எழுத நண்றாக இருக்கும் ஆனால் நடைமுறை சாத்தியமா?
ஒருபேச்சுக்கு ஒரு ஆணும்,பெண்னும் இருக்கிறார்கள் அவர் அவருக்கு சமுதாயத்தில் ஒரு பேர், கெளரவம் இருக்கும், அவர்களுடன் ஏற்கனவே அறிமுகமான ஒருவருக்கு அவர்கள் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருப்பது தெரிய வருகிறது, இப்போது அவர் பார்வையில் யாருடைய மதிப்பு அதிகம் சரியும்? இருவரது மதிப்பும் சரிவது உறுதி, இருவரும் செய்தது ஒரே தவறுதான், ஆனால் இந்த மதிப்பு, கெளரவ சரிவில் ஏன் இந்த பாகுபாடு? தனி ஒரு மனிதனில் இருந்து சமுதாயம் தொடங்குகிறது ஈற்றில் அதுவே சமுதாய பாகுபாடக மாறிவிடுகிறது.
ஜரோப்பிய கலாச்சாரத்துக்கு இது சரிவரும் எமக்கு சரிவருமா? அங்கு ஆணுக்கு பெண் சமன், நாம்தானே ஆணுக்கு பெண் அடிமை என்று வகுத்து வைத்திருக்கிறோம்.
பெண்கள்தண்ணியடிக்கலாமா? நிச்சயமாக குடிக்கலாம். எமது சமுதாயத்தில் எது குறைவாக நடகிறதோ அது திடீர்ரென நடந்தால் அது எமது சமுதாயத்தால் தப்பானகண்ணோட்டத்தோடு பார்க்கப்படுகிறது. அன்று ஒரு காலத்தில் ஆண் முதல் முதல் குடித்தபோதும் அப்படித்தான் பார்த்திருக்கும். பின் அதையே அதிகம் பேர் தொடர்ந்ததும் அது சமுதாயத்தில் அவர்கள்(ஆண்கள்)குடிக்கலாம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். அதைபோல் அதிகளவிலல் பெண்கள் தண்ணியடிக்க தொடங்கினால் அது இன்று நாம் வாழும் சமுதாயத்தால் புதிதாக பார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் நாளைய சந்ததி சமூகத்திற்கு அது இயல்பாக்கம் அடைத்து சாதாரண விடயமாகும். ஏப்போதும் ஆரம்பம்தான் அதிக சோதனைகளை தரக்கூடியது.
அகிலத்தில் அனாதைகள் தொகை அதிகமாவதை விரும்பவில்லை.
//அளவாக அடித்தால் அதுவே மருந்து"
"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு"///
என்ன தத்துவம்!!சூப்பர். :-))
எங்க ஊர்ல அந்த காலத்தில் இருந்து இந்தகாலம் வரை பெண்கள் குடம் குடமாக தண்ணி அடிக்கிறாங்க.
இதுல என்ன தப்ப???.
தாராளமாய் குடிக்கலாம். அவர்கள் குழந்தைக்கும் கொஞ்சம் ஊத்திக்கொடுத்துவிட்டு குடும்பமே குதூகலமாய் இருக்கலாம். இந்தியா உருப்பட இதேபோல் இன்னும் சில தலைப்புகளில் யாரேனும் தொடரலாம். மககளிடையே நல்ல்ல விழிப்புணர்வு வரும்.
ராசுக்குட்டி said...
தாராளமாய் குடிக்கலாம். அவர்கள் குழந்தைக்கும் கொஞ்சம் ஊத்திக்கொடுத்துவிட்டு குடும்பமே குதூகலமாய் இருக்கலாம். இந்தியா உருப்பட இதேபோல் இன்னும் சில தலைப்புகளில் யாரேனும் தொடரலாம். மககளிடையே நல்ல்ல விழிப்புணர்வு வரும்.
புருஸன் மனைவிக்கு கொடுக்காமல் தான் மட்டும் குடிப்பது தப்பில்லையா?
கருத்துரையிடுக