வியாழன், மே 24, 2007

கருணாநிதியின் தொகுதியிலேயே, இரட்டை இலைக்கு வாக்களித்தவர் ரஜனி!!!

சிவாஜி பட ரிலீஸை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு ஐந்து முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார்.

சிவாஜி பட ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜூன் 15ம் தேதி எப்போது வரும் என ரசிகர்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து கொண்டுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு ரஜினி ரசிகர்மன்றமே ரசிகர்களுக்காக நேரடியாக டிக்கெட்டுக்களை விநியோகித்துள்ளது. ரசிகர்கள் எந்தவித சிரமமும் இன்றி படத்தைப் பார்க்கவே இந்த ஏற்பாடு.

இந்த நிலையில், படம் திரையிடப்படும் அத்தனை தியேட்டர்களிலும் அமளி துமளியாக கொண்டாடி விட வேண்டும் என ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இதெல்லாம் தலைவர் காதுகளை எட்ட சட்டுப்புட்டென்று ஐந்து கட்டளைகளை ரசிக மக்களுக்குப் பிறப்பித்துள்ளாராம். தனது மன்ற செயலாளர் சத்யநாராயணா மூலமாக அனைத்து ரசிகர் மன்றங்களுக்கும் இந்த கட்டளைகள் பறந்துள்ளதாம்.

அந்த சர்க்குலரில், சிவாஜி பட ரிலீஸின்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளாராம் ரஜினி.

முதல் கட்டளை: படம் ரிலீஸாகும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. நாகரீகமான முறையில், அமைதியாக பட ரிலீஸின்போது நடந்து கொள்ள வேண்டும்.

2வது கட்டளை: போக்குவரத்து பாதிக்கும் வகையில், சாலைகளில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பெரிய பெரிய வளைவுகளை சாலைகளில் அமைக்கக் கூடாது.

3வது கட்டளை: அரசியல் சம்பந்தப்பட்ட வாசகங்களுடன் கூடிய டிஜிட்டல் பேனர்களை கண்டிப்பாக வைக்கக் கூடாது.

4வது கட்டளை: பிறரைக் காயப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் கூடிய பேனர்களை வைக்கக் கூடாது.

5வது கட்டளை: படம் பார்க்க வரும் பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் தரக் கூடாது. மக்கள் அனைவரும் செளகரியமாக படம் பார்க்க உதவ வேண்டும்.

இந்த ஐந்து கட்டளைகளையும் ரசிகர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என ரஜினி அன்புக் கட்டளை இட்டுள்ளாராம். இதன் அடிப்படையில் சிவாஜி படத்தைக் கொண்டாட ரசிகர்கள் மாநிலம் முழுவதும் தயாராகி வருகின்றனராம்.

படம் திரையிடப்படவுள்ள தியேட்டர்களுக்கு மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர்கள் விசிட் செய்து என்ன மாதிரியான ஏற்பாடுகளை செய்யலாம் என்று ஆலோசனைகளும் நடத்த ஆரம்பித்து விட்டனராம்.

ரஜினி சொன்னா ராகவேந்திரா சொன்ன மாதிரி, ரசிகர்கள் கண்டிப்பாக கடைப்பிடிப்பாங்கண்ணு நம்பலாம்!


பஞ் பரமவசிவம் என்பவர் இதற்கு தற்தமிழில் கருத்து தெரிவித்துள்ளார் அவரின் கருத்து.

வானத்தில் பெரிதாய் பறக்கும் பலூன் மாதிரி தான் அவரின் தோற்றம் மீடியா எனும் காற்றின் உதவியுடன் இருந்தது. அதில் போன தேர்தலில் விட்ட அவரின் சொந்த வாய்ஸ் குண்டூசியாக மாறிக் குத்தியதில் புஸ் என்று காற்றுப் போன பலூனான இன்று இருப்பது தான் அவரின் உண்மை நிலை. முதலில், குழம்பாமல் ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்கட்டும். இவர் யோசிசிசிசிக்கும் நேரத்தில் விஜயகாந்தும், கமலும் பல படங்கள் வெற்றிகரமாக எடுத்து விட்டார்கள். இது மாதிரி மக்கள் பிரச்சனையில் யோசித்தால், பி.எஸ்.வீரப்பா பாணியில் சொல்வதானால் ' நாடும் மக்களும் நாசமாகி விடுவார்கள் '. கல்மனத்தையும் கரைத்த கும்பகோணம் வராதவர். இவர் வந்தால் பிரளயம் நடக்கும் என்ற நினைப்பு மட்டும் இன்னும் பொழைப்பைக் கெடுக்கிறது. -- மக்களின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்காத ரஜினி, துறவுக்கும் போகாம, இல்லறத்துக்கும் போகாம குழப்பும் ரஜினி.

கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்....! அது போல் இந்த ரஜினி காந்த் கதை. அவர் தான் சார்ந்த சினிமாத் தொழிலில் செய்தவற்றைப் பார்ப்போம். ---- ரஜினி - விஜயகாந்த இருவரும் பிரபலமான பின் நடந்த முறைகளைப் பார்ப்போம். ரஜினி- ஏவிஎம், சத்யா மூவிஸ், கவிதாலயா, சுஜாதா பிலிம்ஸ் போன்ற தயாரிப்புகளில் தான் நடிப்பார். அவரால் எந்த ஒரு புதிய தயாரிப்பு நிறுவனமும் மேல் வந்ததில்லை. விஜயகாந்த்- அம்மா மூவிஸிலிருந்த நடித்ததில் 80% புதிய பேனர்களே. ரஜினி:: புதிய இயக்குனர்கள் யாரையுமே அறிமுகப்படுத்தியதில்லை. விஜயகாந்த்: ஆபாவாணன், செல்வமணி தொடங்கி பல இளம் இயக்குனர்களின் சினிமா வாழ்க்கைக்கு காரணமானவர். முண்ணணியில் இருந்த போது சரத்குமார், போன்றோரை தைரியமாக அறிமுகப்படுத்தினார் (வில்லனாக) விஜயகாந்த். ரஜினி எந்த ஒரு நடிகரையும் அறிமுகப்படுத்தியதில்லை. வளசரவாக்கத்தில் ஒரு மருத்துவமனையை ஆரம்பித்து, அதில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்தார் விஜயகாந்த். திரையுலகமே வேலை நிறுத்தத்தில் இருந்த போது உல்லாசபுரி அமெரிக்காவில் சுதந்திரமாய் இருந்தவர் ரஜினி. ஆனால், அந்தப் பிரச்சனையில் இறங்கி தீர்வு காண தோள் கொடுத்தவர் விஜயகாந்த். எம்ஜிஆருக்குப் பின், சினிமா அலுவலகம் வருபவர்களுக்கு வாய், வயிரார உணவு தந்தவர் விஜயகாந்த். வேறுபாடுடன் உணவு பரிமாறப்படும் சூழல் மாற்றி, படப்பிடிப்பில் கறி சோறு அனைவருக்கும் முதலில் போட்டவர் விஜயகாந்த். ரஜினிகாந்த் மற்றவருக்கு என்ன உணவு கிடைக்கிறது என்பது பற்றிய கவலை இல்லாதவர். காவிரிப் பிரச்சனையில் தமிழர்களை மிரட்டியவர் ரஜினிகாந்த். அய்யா அய்யா என்று காலில் விழுந்து விட்டு, கருணாநிதி முதுகில் குத்தியவர் ரஜினிகாந்த். கருணாநிதியின் தொகுதியிலேயே, இரட்டை இலைக்கு வாக்களித்ததாகச் சொன்னவர். கார்கிலுக்கு 5 லட்சம் தானம் கொடுத்து, வீரர்கள் உடல் வரும் போது நேரில் போய் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் எங்கே, கருணாநிதி முன்னிலையில் , பொதுகூட்டத்தில் அறிவிப்புடன் 2 லட்சம் தந்த ரஜினி எங்கே... ? யாருடனும் முகம் கொடுத்துப் பேசாத, திரையுலகப் பிரச்சனைக்கு வந்து உதவாத ஒரு மனிதர் ரஜினிகாந்த். அவரின் பயத்தின் மெளனத்தை மோனம் என்று தப்பர்த்தம் பண்ணிவிட வேண்டாம்.

thatstamil.com இல் இருந்து.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

என்னயா பிருந்தா, நீ என்ன விஜயகாந்த் ரசிகனா? இல்ல விஜயகந்த் கட்சி தொண்டனா? ரஜினியோட compare பன்ன வேர ஆளே கிடைக்கலயா? போய்யா போ போய் உன் புள்ளைங்கள படிக்க வை. வெட்டித்தனம பொளப்பு ஓட்டதடா சுண்டக்கா.

பிருந்தன் சொன்னது…

நீர் என்ன கமலு ரசிகரா? தேவர் மவன் வசனத்தை அவுத்து விடுறீர்,நான் இங்க என்ன விவசாயமா பண்ணிக்கிட்டு இருக்கன், எனது அப்பன் ஆத்தா படிக்கவச்சதாலதான் நான் கணனியில் பதிவிடுறன், எனது புள்ளயும் தொடர்ந்து இடுவான் பதிவு,

என்ன இருந்தாலும் எங்கள் கறுப்பு வைரம்,மதுரை சிங்கம் எதிர்கால முதல்வரை நீங்க அசிங்கப்படுத்தி இருக்ககூடாது;-)

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us