வெள்ளி, ஏப்ரல் 13, 2007

தமிழை கொலை செய்ய ரஜினி எடுத்த கலை அரிவாள்!

ரஜினியின் பொருள்கள் அனைத்தும் கர்நாடகத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. - ஒரு அவசிய அலசல்!

பகல் முழுவதும் உழைத்து வியர்வையை ஆறாக்கி, விளைச்சலைப் பெருக்கிய விவசாயத் தொழிலாளர்கள் 3 ரூபாய்க் கூலி உயர்வு கேட்டதற்காகச் சாட்டையடியையும் சாணிப்பாலையும் பரிசாகப் பெற்ற மண்தான் தமிழகம். இங்கேதான், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசை நடிகர் ரஜினிக்குக் கூலியாகக் கொடுத்தார்கள் தமிழக மகா ரசிகர்கள்.

இந்த அநியாயக் கூலிக்கு நன்றிக்கடனாக, உடல்-பொருள்-ஆவி அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ரஜினி தருவார் என்று பாட்டு எழுதினார் கவிப்பேரரசு வைரமுத்து. ரஜினியின் பொருள்கள் அனைத்தும் கர்நாடகத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. மிச்சமுள்ள உடலையும் ஆவியையும் கேட்கக்கூடிய அளவுக்குக் கொடூர எண்ணம் கொண்டவர்களல்லர் தமிழக மகா ரசிகர்கள். குறைந்தபட்சம், தன்னுடைய படங்களில் தமிழைக் கொல்லாமலாவது இருக்கட்டும் என்றுதான் எதிர்பார்த்தனர். ஆனால், ரஜினிக்காகக் கவிப்பேரரசு கொடுத்த உறுதிமொழியைக் காலில் போட்டு நசுக்கிவிட்டு, அதே ரஜினியின் அனுமதியோடு தமிழ்க் கொலை செய்திருக்கிறார் வித்தக் கவிஞர் பா.விஜய்.

பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சிகளைத் தொடர்ந்து உலகப் புரட்சி செய்யப்போகிற 'சிவாஜி' படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில், தன் வியர்வைக்குத் தங்கக்காசு கொடுத்த தமிழுக்கு ரஜினி செய்திருக்கும் 'சேவை'யைப் பாருங்கள்.

ஒரு கூடை முன்லைட்
ஒன்றாகச் சேர்ந்த கலர்தானே என் வெய்ட்
.... ........... ....................
......... ............ ..............
ஆ.. ஓ.. லெட்ஸ் த்ரொ எ ஃபிடோ
ஹீரோ...ஹீரோ... ஹீராதி ஹீரோ
ஸ்டாரோ ஸ்டாரோ.... நீ சூப்பர் ஸ்டோரோ

-இப்படி செம்மொழித் தமிழில் பொளந்து கட்டியிருக்கிறார்கள். பாடலின் இசையும் 100% மேற்கத்திய பாணிதான். தமிழ் மண்ணின் வாசனையைத் தேடினாலும் கிடைக்காது.

கதையமைப்பின்படி இது வெளிநாட்டில் பாடப்படும் பாடல் என்று வரிந்துகட்டிக் கொண்டு வருவார்கள் ரஜினியின் ரசிகாதி ரசிகர்கள், நிற்க...

'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா'

என்பதும் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்ப்பட பாடல்தான். 'பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ' என்பதும் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பாடல்தான். 'அன்பு நடமாடும் கலைக்கூடமே, ஆசை மழை மேகமே, கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே.. கன்னித் தமிழ் மன்றமே' என்பதும் வெளிநாட்டுப் படப்பிடிப்புப் பாடல்தான். சில மாதங்களுக்கு முன் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் நியூயார்க் நகரின் எழிலைக் கண்களுக்கு விருந்தாக்கிய பாடலும்கூட, 'வெள்ளி நிலவே... நட்சத்திரப் பட்டாளம் கூடிக்கொண்டு வந்தாய்' என்றுதான் அமைந்திருக்கிறது.

ரஜினியே ஒரு காலத்தில், 'அக்கறைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே' என்று தான் வெளிநாட்டுப் படப்பிடிப்பில் வாயசைத்தார். அவருடைய ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தும் அதற்கு நன்றிக்கடனாக மூன்லைட், டியூப்லைட் என வெளுத்து வாங்குகிறார். ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட இசைப்புயல்கள், சூறாவளிகள், சுனாமிகள் வருகைக்குப்பின் தமிழ்ப்படப் பாடல்களில் தலைதூக்கிய ஆங்கில ஆதிக்கம் இப்போதுதான் மெல்ல மாறிவந்தது. பாவலர்கள் அறிவுமதி, தாமரை, நா.முத்துக்குமார், யுகபாரதி உள்ளிட்டோர் முடிந்த அளவு பிற மொழிக்கலப்பைத் தவிர்த்து வந்த நிலையில்தான் ரஜினி+ஷங்கர்+ஏ.ஆர்.ரகுமான்+சுஜாதா+பா.விஜய் கூட்டணி மீண்டும் ஆங்கிலத் திணிப்பை நடத்தியிருக்கிறது.

செத்த மொழியான சமஸ்கிருதத்தின் கருட புராணத்தைத் தூக்கிப்பிடிக்கும் 'அந்நியன்', சமூக நீதிக்கு எதிரான சித்தரிப்புகளைக் கொண்ட 'ஜென்டில்மேன்', வாலிபத்தின் வக்கிரங்களை மட்டும் தேடியெடுத்து ஆராதிக்கும் 'பாய்ஸ்' என்று தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் நிறையவே 'புண்ணியம்' செய்திருக்கிற ஷ்ஷ்ஷ்ஷ்ஷங்கர் தனது 'டேக் இட் ஈசி பாலிசி'யின் படி, ரஜினியுடன் கூட்டணி போட்டுக்கொண்டு தமிழ்க் கொலைகளைப் புரிய, திரைப்படம் எனும் கலை அரிவாளைத் தீட்ட ஆரம்பித்திருக்கிறார். இவர்களின் வியர்வைக்குத்தான் நாமும் தங்கக்காசுகளை அள்ளித் தரப்போகிறோம். தமிழக அரசும் 'சிவாஜி' என்கிற தமிழ் 'டைட்டிலுக்கு' வரிவிலக்கு தரப்போகிறது.

நன்றி -தாகம் இதழ்

22 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நீங்க என்னதான் சொன்னாலும் திருட்டி வீசீடி இல் இந்த படத்தை பார்க்காமல் நான் விடமாட்டேன்:-)

பெயரில்லா சொன்னது…

//Anonymous said...
நீங்க என்னதான் சொன்னாலும் திருட்டி வீசீடி இல் இந்த படத்தை பார்க்காமல் நான் விடமாட்டேன்:-)
//

same here :-)

பெயரில்லா சொன்னது…

ரஜினி முதலில் தமிழை ஒழுங்காக பேசட்டும் அப்புறம் தமிழருக்காக ஒரு துரும்பை எடுத்துப்போடட்டும்.

ரஜினியின் தமிழ் உச்சரிப்பு இன்னும் ஒரு ஆந்திராகாரனும், கர்நாடகாக்காரனும் தமிழை எப்படி பேசுவானோ அப்படித்தான் உள்ளது.

உதாரணமாக அவருக்கு "ச" வரவே வராது எப்போதும் "ஷ" தான் வரும்.
சந்திரமுகியில் கூட வடிவேலுவை அவர் முருகேஷூ என்று தான் கூப்பிடுவார். தமிழ்கடவுள் முருகன் பெயரை வைத்துக்கொண்டும் ஷரவணன் என்று தான் தன் பெயரை அவர் உச்சரித்தார்.

இதுபோல பல உதாரணங்களை சொல்லமுடியும்.

ஆனால் தமிழனுக்கு புத்தி மட்டாக இருக்கும் வரை, இவரைப்போன்றவர்கள் ஏய்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

G.Ragavan சொன்னது…

சிவாஜி படத்துக்கெல்லாம் வரிவிலக்கு குடுக்ககூடாது. அப்படீன்னா நாளைக்கு யாரும் ஜானின்னு படமெடுத்தாலும் வரிவிலக்கு குடுக்கக் கூடாது. ஒருவேளை அப்துல் கலாம்னு படமெடுத்துட்டா!

அதெல்லாம் சரி. பேசாம சிவாஜி கணேசன்னு பேர் வைக்கச் சொல்லலாம். ஆனா மாட்டாங்க. நடிகர் திலகம்னு வைக்கலாம். ஆனா அவர் பேர இப்பிடி ஒரு படத்துக்கு வெச்சு அவர அவமானப்படுத்த வேண்டாம்.

படத்துல ரஜினி சிவாஜின்னு உச்சரிக்க மாட்டாரு. ஷிவாஜி ஷிவாஜின்னுதான் உச்சரிப்பாரு. ஷிவாஜி ஒரு தடவ சாப்டா நூறுதடவ சாப்ட மாதிரின்னு டயலாக் பேசுவாரு.

பெயரில்லா சொன்னது…

dont u have any work?try to get 1 goldcoin per day for your sweat that will be graet this would be bad...

பெயரில்லா சொன்னது…

ரஜினியின் எந்த பொருள்கள் கர்நாடகத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன சொல்லுங்கள்.
முதலில் ரஜினி ஒரு கன்னடர் அல்ல மராட்டியர்.

பெயரில்லா சொன்னது…

ஓ இதுக்கு வரி விலக்கு வேறயா?

பெயரில்லா சொன்னது…

ரொம்ப ஒவராக தெரியல? படத்தை பாரத்தோமா பாடலை கேட்டோமாக என்று இல்லாமல் என்னமோ தமிழ் கர்நாடகன்னு கூவிக்கினு இருக்கே

என்னையா பெரிய தமிழ் எல்லா மொழியும் நல்ல மொழிதான் அது என்ன தமிழுக்கு மட்டும் தனி சிறப்பு

வெத்து வேட்டு சொன்னது…

vayaththerichalllll.............

koooooooooooooooooooooooooooooo

பெயரில்லா சொன்னது…

எச்சூஸ்மி, இப்போ நா கேட்டுகிட்டு இருக்க தமிழ்ப்பாடல் எந்த திரைப்படத்தில் வருகிறது. ஐ ரியலி லைக் இட் யா...

பெயரில்லா சொன்னது…

//உதாரணமாக அவருக்கு "ச" வரவே வராது எப்போதும் "ஷ" தான் வரும்.
சந்திரமுகியில் கூட வடிவேலுவை அவர் முருகேஷூ என்று தான் கூப்பிடுவார். தமிழ்கடவுள் முருகன் பெயரை வைத்துக்கொண்டும் ஷரவணன் என்று தான் தன் பெயரை அவர் உச்சரித்தார்.//

//படத்துல ரஜினி சிவாஜின்னு உச்சரிக்க மாட்டாரு. ஷிவாஜி ஷிவாஜின்னுதான் உச்சரிப்பாரு. ஷிவாஜி ஒரு தடவ சாப்டா நூறுதடவ சாப்ட மாதிரின்னு டயலாக் பேசுவாரு.//

அது மட்டுமல்ல லட்சம், லட்சியம் என்ற சொற்கள் லக்ஷம், லக்ஷியம் என்று தான் உச்சரிக்க இந்த சூப்புர நடிகருக்கு வரும்..

அதுக்கு காரணம் தேவபாடை மீதுள்ள பாசம்.

அதனால் தான் நூல்பார்ட்டிகளும் இந்த கழிசடையைத் தலையில் (குடுமியில்?) தூக்கி வைத்து ஆடுகின்றனர்..

மஞ்சூர் ராசா சொன்னது…

சங்கர், ரஜினி, ரகுமான், சுஜாதா என எல்லோரும் காசுக்காகத்தான் ..... இதில் நாம் சொல்லியா திருந்தப் போகிறார்கள்?

பெயரில்லா சொன்னது…

//சங்கர், ரஜினி, ரகுமான், சுஜாதா என எல்லோரும் காசுக்காகத்தான் ..... இதில் நாம் சொல்லியா திருந்தப் போகிறார்கள்?//

பார்க்காம இருந்தால் திருந்துறதுக்கு வாய்ப்பு வந்தாளும் வரலாம்.


பெங்களூரில் நட்சத்திர ஹோட்டல்கள், சாப்பிங் காம்ப்ளக்ஸ் என அவருடைய(பினாமி) கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் அவருக்கு நிறைய உள்ளது.

பெயரில்லா சொன்னது…

Anonymous hat gesagt...
ரொம்ப ஒவராக தெரியல? படத்தை பாரத்தோமா பாடலை கேட்டோமாக என்று இல்லாமல் என்னமோ தமிழ் கர்நாடகன்னு கூவிக்கினு இருக்கே

என்னையா பெரிய தமிழ் எல்லா மொழியும் நல்ல மொழிதான் அது என்ன தமிழுக்கு மட்டும் தனி சிறப்பு

5:47 AM

தமிழனுக்கு தமிழ்மொழி ஒசத்திதான் அப்பு, ஒனக்கு ஒன் அம்மா ஒசத்தி என்றமாதிரி.

பிருந்தன் சொன்னது…

Anonymous said...
எச்சூஸ்மி, இப்போ நா கேட்டுகிட்டு இருக்க தமிழ்ப்பாடல் எந்த திரைப்படத்தில் வருகிறது. ஐ ரியலி லைக் இட் யா...

6:23 PM

நீங்கள் கேட்டுக்கொண்டு இருக்கும் இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் "ரெண்டு":-)

பெயரில்லா சொன்னது…

Who wanted his support in 1996, 1998 and in 1999.Did not DMK and SUN TV promote hime when he wanted people of TamilNadu to vote for DMK alliance.If Marans can invest in a Kannada Channel why cant
RajiniKanth invest in Karnataka.
Listen to the tamil spoken in SUN TV channels.They are worse than the Tamil spoken by RajiniKanth.

பெயரில்லா சொன்னது…

பாவலர்கள் அறிவுமதி, தாமரை, நா.முத்துக்குமார், யுகபாரதி உள்ளிட்டோர் முடிந்த அளவு பிற மொழிக்கலப்பைத் தவிர்த்து வந்த நிலையில்தான் ரஜினி+ஷங்கர்+ஏ.ஆர்.ரகுமான்+சுஜாதா+பா.விஜய் கூட்டணி மீண்டும் ஆங்கிலத் திணிப்பை நடத்தியிருக்கிறது.

good joke because other than Thamari and Arivumathi others
are as crude and as commercial
as anybody else is.

பெயரில்லா சொன்னது…

tamil unoda amma va pola usathinu solra....nanga solrathu un amma matum than pathini nu ila...niraya peru irukanga...so tamilum best nu solli paru...tamil matum than best nu solatha...ok..?mathapadi intha hotels shopping complex nu proof ilama pesatha appu....neyum nalaiku star ana apdi than pesuva...unala mudiyala...so vayitherichallll

பெயரில்லா சொன்னது…

appu...neenga ipa enga appu polapu nadathureenga? kasukaka neenga ooru vitu ooru pona thapu ila...athuve rajini senja thapu....enna logic appu? germany la irunthu kitu neenga tamiluku senja sevai pothum appu...nanga parthukarom engaloda enga tamila....

பெயரில்லா சொன்னது…

unaku enapa avlo kopam particulara rajini mela matum....nee pesi irukuratha partha unoda vayitherichal nalla theriyuthupa...nalla doctor kita kami...ella languageum nalla thu than...tamiluku rajini ketathu senja sollu...kanadathuku ethuku nallathu panrarunu sonna athu avaroda istam...first nalla manusana pesi palagu...

சீனு சொன்னது…

//ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட இசைப்புயல்கள், சூறாவளிகள், சுனாமிகள் வருகைக்குப்பின் தமிழ்ப்படப் பாடல்களில் தலைதூக்கிய ஆங்கில ஆதிக்கம் இப்போதுதான் மெல்ல மாறிவந்தது.//

சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.

//ரஜினி முதலில் தமிழை ஒழுங்காக பேசட்டும்//

அட நீங்க வேற. சந்திரமுகி-ல் "மொறியா சாதகம் பன்னா வ்வராத வித்தியே கடியாது"-ன்னு சொல்லியிருப்பார் தலைவர். ஆனா அவர் சாதகம் பன்னல் போல...

பெயரில்லா சொன்னது…

சிவாஜியில் ரஜனிபேசி இருக்கும் தமிழ்?

அம்மா எனக்கு நல்லதொரு தமில் பெண்ணா பாருங்க......

பிஸ்னஸ் பண்ணவா பணம் கேட்கிறன் மக்களுக்கு சர்வீஸ் பண்ண பணம் கேட்கிறன்..

சந்தோஷம்தான் வால்க்கை..

திருந்த இடமுண்டு:-)

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us