புதன், மார்ச் 14, 2007

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சுட வேண்டிய அவசியம் இல்லை; வக்காலத்து வாங்கும் ஏ.கே.அந்தோணி!!!

டெல்லி: இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. எனவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சுட வேண்டிய காரணமோ, அவசியமோ இல்லை என்று கூறியுள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான ஏ.கே.அந்தோணி.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் குறித்து லோக்சபாவில் நேற்று தமிழக எம்.பிக்கள் பிரச்சினை எழுப்பினர்.

அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசியது. இதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.

கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்திற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சர் வந்து இதுகுறித்து விவாதித்துள்ளார். இலங்கை அரசுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி அந்நாட்டு கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை சுடவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.

ஆனால் விடுதலைப் புலிகள்தான் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இலங்கை அரசு கூறுகிறது.

தமிழக மீனவர்களின் நலனைக் காக்க மத்திய அரசு தனது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. எனவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார் அந்தோணி.

முன்னதாக திமுக உறுப்பினர் செ.குப்புசாமி பேசுகையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பல தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதைத் தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
http://thatstamil.oneindia.in/news/2007/03/14/minister.html

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இந்தியா ஒரு சோணகிரி நாடு.
உறுதியான கொள்கைகள் இல்லாத நாடு.
நாட்டுப் பற்றுக் கிஞ்சித்தும் கிடையாத நாடு.
சுய நலத்திற்காக எதையும் செய்யும் குடி மக்கள் நிறைந்த நாடு.
செத்துக் கொண்டிருப்பது இந்திய மீனவர்கள், தப்பி வந்த இந்திய மீனவர்கள் சொல்வதை நம்பாமல், இலங்கை வெறியர்களின் கதையை நம்பும் கேனையர்கள் ஆளும் நாடு.
தவறுதலாக வீசப்பட்ட குண்டிற்குக் கூட அமெரிக்காவை மன்னிப்புக் கேட்க வைத்த சீனா எங்கே, இந்த இளிச்சவாய் இந்தியா எங்கே?

இந்திய அரசின் பேடி நாடகத்தைப் பார்த்திராமல், தமிழகம், தனது காவல் துறையில், கடற் பிரிவு ஒன்றையும் தொடங்கி மீனவருக்குக் காவலளிக்க வேண்டும். தமிழகத்திற்கு அந்த உரிமை நிச்சயம் வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

மத்திய அரசின் அனுமதியின்றி எப்படி ஆரம்பிப்பது?

பெயரில்லா சொன்னது…

இந்தியா மத்திய அரசு ஒருபொழுதும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க முன்வரமாட்டார்கள்.

பெயரில்லா சொன்னது…

// மத்திய அரசின் அனுமதியின்றி எப்படி ஆரம்பிப்பது?
//
ஆரம்பிக்கக் கூடாது என்று சட்டம் இருக்கா. போலீஸ் பிரிவிற்கு ஒரு கடல் பிரிவு என்று ஆரம்பிப்பதற்கு அனுமதி தேவையில்லை. மேலும், அனுமதிக்குக் காத்திராமல் செயலில் இறங்க வேண்டியது தான். அப்படி இறங்கினால் மத்தி பதறியடித்துக் கொண்டு வரும் அப்பொழுது பேசலாம். எல்லாத்துக்கும் பயந்து கொண்டிருந்தால் ஒன்றும் நடவாது.
மத்தியின் முடிவையோ, உயர் நீதிமன்றங்களின் முடிவையோ பல அரசுகள் நடைமுறைப் படுத்தவில்லையே, மத்தி என்ன செய்கிறது அதற்கு.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us