ஞாயிறு, பிப்ரவரி 18, 2007

இந்தியாவிலிருந்து தமிழகம் பிரிவதற்கு தமிழீழம் காரணமாயிராது கர்நாடகமும் கேரளமுமே அதற்கு காரணமாயிருக்கப்போகிறது.

இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிவதற்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு போதும் காரணமாயிருக்க மாட்டாதெனத் தெரிவித்துள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அண்டை மாநிலங்களான கர்நாடகமும் கேரளமுமே அதற்குக் காரணமாயிருக்குமென எச்சரித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவில்லையெனக் கூறி நேற்று சனிக்கிழமை சென்னையில் ம.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தியது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே நெடுமாறன் இவ்வாறு எச்சரித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்;

ஒருவேளை தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிய வேண்டுமென்ற எண்ணம் மக்களிடையே உருவாகுமானால், வளருமானால் அதற்கு தமிழீழப் போராட்டம் ஒரு போதும் காரணமாயிருக்காது.

அண்டை மாநிலமான கர்நாடகமும் கேரளமும் தமிழர்களுக்கெதிராக செயல்படுவதாலும் வஞ்சிப்பதாலுமே எமக்கு அவ்வாறானதொரு எண்ணம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதனால் பிரிவினையை நோக்கி எம்மைத் தள்ள வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார்.

இங்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றுகையில்;

நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின் படி கர்நாடக மாநிலம் 11 இலட்சத்து 20,000 ஏக்கருக்கு மேலே பாசனம் பெறக்கூடாது என்று கூறியிருந்தும் இன்று இந்தத் தடையை அவர்கள் எடுத்துவிட்டார்கள்.

15 இலட்சத்து 85,000 ஏக்கருக்கு பாசனம் செய்யப்போகின்றோம் என்று இன்று கர்நாடகம் கூறுகிறது. அவர்களது அடுத்த குறி 25 இலட்சம் ஏக்கர் பாசனமாகும்.

இதன்மூலம் அவர்களுக்கு பெரும் அநியாயமான சாதகமும் எமக்கு வஞ்சகமான பாதகமும் நடந்துள்ளதை தமிழக மக்கள் உணரவேண்டும். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு இழந்துகொண்டிருக்கும் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

கேரளத்தின் முல்லை பெரியாறு ஒரு பக்கம் பாலாறு ஒரு பக்கம், ஜீவநதியாம் காவிரி ஒரு பக்கம் என தமிழர்களின் உரிமைகள் பறிபோகும் நிலையில் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க தமிழகமே திரண்டெழ வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்ததுடன் தொடர்ந்தும் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுமானால் இந்தியாவின் ஒற்றுமைக்கே குந்தகம் ஏற்படுமென்றும் எச்சரித்தார்.
http://www.thinakkural.com/news/2007/2/18/default.htm

5 கருத்துகள்:

மாசிலா சொன்னது…

ஐயா பழ.நெ. வின் இந்த பேச்சு, என்ன இருந்தாலும் இது கொஞ்சம் அளவுக்கு அதிகமான பேச்சாக தெரிகிறது!

பிருந்தன் சொன்னது…

test

stan சொன்னது…

Sir,

Nedumaran is a day dreamer.In Tn 99% people will not be knowing about him.If he wants he can go and settle in Jaffan. We are not fools to seperate from India.

Nobody can do any harm to or fith toward the country India and nobody can seperate us from India. We dont want to miss the chance of becaming susper power soon along with our country India

A proud Indian Tamilan

மிதக்கும் வெளி சொன்னது…

நெடுமாறன் பேசுவதையெல்லாம் சீரியசாக எடுத்துக்கொண்டு பதிவு போடுகிறீர்களே? அவரது இயக்கம் தமிழகத்தில் ஜெயலலிதாவால் தடை செய்யப்பட்டது. அதை எதிர்த்தே அவர் ஒன்றும் கழட்டவில்லை. அப்புறம் தனித்தமிழ்நாடு வாங்கிக்கொடுத்துத்தான் ஓய்வாராமா? அதை விடுங்கள். இங்கே தமிழ்த்தேசிய வீரர்கள் சிங்களக்கொடி, அமெரிக்கக்கொடியையெல்லாம் எதிர்ப்பார்கள். ஆனால் பெரியார் மாதிரி இந்தியத்தேசியக்கொடியை எரிக்கமாட்டார்கள். ஏனென்றால் இ.தே.கொடியை எரித்தால் தேசியப் பாதுகாப்புச்சட்டம் பாயும். இந்த தமாசையெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டம். ரிலாக்ஸ்.

sreesharan சொன்னது…

பழநெடுமாறன் இப்படி நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது. இந்திய நாடு ஜனநாயக நாடு, எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு.பெங்களுருவில் ஒரு கடைக்கு தமிழில் பெயர் பலகை வையுங்கள். ஒரு வாரம் காத்திருங்கள் அதுவரை உங்கள் உடைமைக்கும், உயிருக்கும், கடைக்கும் ஏதும் ஊறு ஏற்படாமல் இருந்தால் இந்திய திருநாட்டில் ஜனநாயகம் செவ்வனே பாதுகாக்கப்படுகிறது என ஒப்பு கொள்கிறேன். கர்நாடகம் ஒன்றும் பாகிஸ்தானில் இல்லை.அண்டை மாநிலங்களால் தொடர்ந்து நாம் எதிரிகளாக குறி வைக்கப்பட்டு தாக்கப்படுகிறோம். இது இப்படியே தொடர்ந்தால் பழ.நெடுமாறன் சொன்னது ஒரு நாள் கண்டிப்பாக நிறைவேறும்

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us