செவ்வாய், ஜூலை 04, 2006

பூமியை நெருங்கி வரும் ராட்சத விண்கல்.

விண்வெளியில் சுற்றும் ராட்சத விண்கல் இன்று பூமியை நெருங்கி வருகிறது. விண்வெளியில் ஏராள மான சிறு சிறு கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் ஒரு சில கோளில் இருந்து உடைந்து பிரிந்த விண்கல் அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்த விலகி பூமியை நெருங்கி வருகிறது.

கடந்த 2004-ம் ஆண்டு இந்த ராட்சத விண்கல்லை கண்டு பிடித்த விஞ்ஞானிகள் அதற்கு `எக்ஸ் பி.14' என்று பெயரிட்டுள்ளனர். 900 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கல் இன்று இது வரை இல்லாத அளவுக்கு பூமியை நெருங்கி வருகிறது. ஆனால் பூமிக்கு இதனால் எந்த ஆபத்தும் இல்லை. பூமியை அது தாக்கும் வாய்ப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் இந்த ஆண்டு இறுதியில் பூமியில் விழுந்து தாக்கும் என்று முன்பு விஞ்ஞானிகள் கூறி இருந்தனர்.

இன்று இந்த விண்கல் வட அமெரிக்காவுக்கு மேலே பூமியில் இருந்து 2 லட்சத்து 68 ஆயிரம் மைல் உயரத்தில் இருக்கும்.

நன்றி>யாழ்.கொம்.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//இதில் ஒரு சில கோளில் இருந்து உடைந்து பிரிந்த விண்கலம் //

விண்கல் என்று சொல்ல வந்தீர்களா?

பிருந்தன் சொன்னது…

ஆமாம் விண்கல் என்று வரவேண்டும், கலமென்று வந்துவிட்டது, திருத்தி இருக்கிறேன், சுட்டிக்காட்டியதுக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

எல்லாம் படம் காட்டுறாங்க ... நீங்க படம் காட்டாம பயம் காட்டுறிங்க :)

பிருந்தன் சொன்னது…

வணக்கம் கோவி கண்ணன் வரவுக்கு நன்றி, ஏதோ என்னால முடிஞ்சது இந்த தமிழ் சனத்துக்கு காட்டிறன்:)))

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us