சும்மா கிடைத்ததை ஓசியில் கிடைத்ததாகச் சொல்வது வழக்கம். இது எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் நம் நாடு இருந்த போது அவர்கள் அனுப்பும் தபால்களில் o.c.s என்ற முத்திரைக் குத்தப்பட்டிருக்கும். இதன் அர்த்தம் on company service என்பதாகும்.
o.c.s முத்திரை குத்திய தபால்கள் ஸ்டாம்பு ஒட்டாமலே எங்கும் சென்றதால் ஓசியில் போகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் எல்லாமே ஓசியாகிவிட்டது.
ம.ஞானபிரகாஷ்,
நன்றி/யாழ்.கொம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக