அடிப்படை பண்பில்லா நகரம் என்றால் அது மும்பை தானாம். ஆம், உலக நாடுகளில் 35 நகரங்களின் வரிசையில் இதற்காக "முதல் பரிசை' பெற்றுள்ளது.
சாலையில் போகும் போது கண் தெரியாத ஒருவர் போகிறார், நமக்கென்ன என்று போகாமல், அவரை சாலையின் குறுக்கே கடக்க உதவுவது, ஒருவர் காயம் பட்டால், குறைந்த பட்சம் பைக்கை அப்புறப்படுத்துவது, இதெல்லாம் தான் பண்பு. மனிதாபிமானம், கருணை, இரக்கம் எல்லாம் சேர்ந்தது தானே பண்பு. அடிப்படை பண்புகள் என்று சில உண்டு. அந்த பண்புகள் இருந்தால் தான் மனிதன். அப்படிப்பட்ட பண்பு மிக்க மனிதர்கள் அதிகம் இல்லாத நகரங்கள் என்று 35 நகரங்களை தொகுத்துள்ளது ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ். மிக மோசமான விஷயங்களுக்காக தரப்படும் "ராஸ்ப்பெரி விருது' இப்போது, பண்பில்லா நகரங்களுக்கு தந்துள்ளது இந்த இதழ்.
இதற்காக பல நாடுகளில் உள்ள 35 நகரங்கள், சர்வேக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
ஆபீஸ், ஓட்டல், மருத்துவமனை போன்ற இடங்களில் தன் பின்னால் ஒருவர் வருகிறார் என்றவுடன், கதவை பிடித்துக்கொண்டு வழிவிடுவது, பேப்பர் கட்டு, பைல்கள் விழுந்துவிட்டால், அவற்றை சேகரிக்க உதவுவது, எந்த பொருள் வாங்கினாலும், பில் பணம் செலுத்தியவுடன் நன்றி சொல்வது என்று மூன்று முக்கிய பண்புகளை வைத்து சர்வே செய்யப்பட்டது.
மும்பையில் அப்படிப்பட்ட மூன்று பண்புகளிலும் பல இடங்களிலும் பல தரப்பினரும் மிக குறைவாகவே மதிப்பெண் வாங்கியுள்ளனர். எங்கும் இப்படிப்பட்ட அடிப்படை பண்பு காணப்படவில்லை என்கிறார்கள் இந்த சர்வே எடுத்தவர்கள்.
ஆனாலும், ஐரோப்பிய கூட்டமைப்பில் சேர்ந்து ஏழு மாதங்களே ஆன ருமேனியா நாட்டின் தலைநகர் புகாரெஸ்ட் நகரை விட, மிக மோசமாக இல்லை என்பது தான் மும்பைக்கு கிடைத்த ஆறுதல்.
மும்பையை போலவே, லண்டன், பாரீஸ் மக்களுக்கும் பண் பில்லை என்பதையும் சர்வே எடுத்தவர்கள் கண்டுபிடித்து விமர்சித் துள்ளனர். பதினெட்டு ஐரோப்பிய நகரங்களில் எடுக்கப்பட்ட சர்வேயில், இரண்டு நகரங்களுமே பத்தாவது இடத்தை பகிர்ந்து கொண் டுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரம், மிகுந்த பெருமிதத்தை அடைந்துள்ள நகரம். ஆம், அங்கு பண்பு, கருணை என்பது 80 சதவீதம் மக்களிடம் நிறைந்துள்ளது என்று சர்வே கூறுகிறது. கடந்த 2001ம் ஆண்டு நடந்த பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னர், மக்களிடம் அக்கறை, பரிவு, கருணை எல்லாம் அதிகரித்து விட்டது என்கின்றனர் சர்வே நிபுணர்கள்.
இதையடுத்து, சுவிட்சர்லாந்தின் ஜூரிச், கனடாவின் டொரன்டோ, பிரேசிலின் சுவா பாலோ, ஜெர்மனியின் பெர்லின் ஆகிய நகரங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thanks:Dinamalar..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக