புதன், ஜூன் 23, 2010
செம்மொழி மாநாட்டு சிறப்பு அரசு மதுபானக் கடை!!!
டாஸ்மாக் கடை ஊழியர்கள், கோவையிலிருந்து எழுதுகின்றனர்: நாங்கள் கோவை அரசு மதுபானக் கடையில் பணிபுரிந்து வருகிறோம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக, கோவை மாநகரம் பரபரப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது, கோவையில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் விடுமுறை விடப்படும் என்ற பேச்சு முன்பு எழுந்தது. செம்மொழி மாநாட்டின்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால், அதனால் பல்வேறு விபத்துகள் மட்டுமல்ல, இடையூறுகளும் ஏற்படும் என்பதால், விடுமுறை விடுவர் என்றே நாங்கள் நினைத்தோம். கடைக்கு வரும் கஸ்டமர்களும், எப்போதிலிருந்து விடுமுறை தொடங்குகிறது என்று கேட்டு வந்தனர்.ஆனால், சமீபத்தில் எங்களுக்கு, டாஸ்மாக் நிர்வாக மேலாளரிடம் இருந்து சுற்றறிக்கை வந்தது. அதில், ஒவ்வொரு மதுபானக் கடையிலும், அதிகபட்சமாக எத்தனை பெட்டிகள் வைக்கலாம் என்பதை தெரிவிக்க வைத்து, தீபாவளி சமயத்தை விட அதிகமாக சரக்குகளை அனுப்பியுள்ளது.செம்மொழி மாநாட்டை வைத்து, சரக்கு விற்பனையை இரண்டு மடங்காக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளனர்.
"யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது. கடையில் அனைத்து சரக்குகளும் வைத்து விற்பனையை பெருக்க வேண்டும். கடையில் பிரிட்ஜ் பழுதாகி இருந்தால், அதை சரி செய்து, அதிகளவில் பீர் விற்பனை செய்ய வேண்டும்' என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. தமிழர்களின் ஒரே மகிழ்ச்சி, "சரக்கு அடிப்பது தான்' என்று, உலகத் தமிழர்கள் மத்தியில் நிறுவப் போகிறது இச்செயல்!
எங்களுக்கு என்ன பயம் என்றால், செம்மொழி மாநாட்டு பந்தலிலேயே, "செம்மொழி மாநாட்டு சிறப்பு அரசு மதுபானக் கடை' என்று திறந்து விடுவரோ என்பதுதான்! உலகத் தமிழர்கள் என்ன நினைத்தால் என்ன? "டாஸ்மாக்' சரக்குகள் விற்றால் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்
தினமலர் - வாசகர் பகுதி கடிதம் ..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக