புதன், மே 13, 2009

தமிழக நண்பன் கறுப்பையனுக்கு,

அன்புள்ள நண்பா நான் இங்கு நலம், உடல் மட்டும் நலம். மனம் ஏதோ அமைதியின்றி தவிக்கின்றது, ஊரில் நடப்பவை அமைதியை தருவதாக இல்லை, நேற்று முன்தினம் நடந்த இனவழிப்பு மனதை அமைதி கொள்ள விடுதில்லை.

அகதியாகத்தான் உனது நாட்டில் வந்து இறங்கினேன், அகதியாகவா நீயும் உன் பெற்றோரும் பார்த்தீர்கள், நண்பனாக, மகனாக அல்லவா என்னை பார்த்தீர்கள். சரியாக இருபது வருடங்கள் காலம் கடந்தோடி விட்டது இருப்பினும், உனதும் உனது பெற்றோரின் அன்பும் இன்றும் பசுமையாக எனது உள்ளத்தில் நிறைந்து இருக்கிறது, உனை நான் கண்ட முதல் நாள் இன்னமும் காட்சியாக எனது உள்ளத்தில் ஓடுகிறது,

நகர ஆரம்பிக்கும் பேருந்தில் 50பைசா போதாததால் இறங்க நினைத்த எமது தோளில் ஆதரவாக வீழ்ந்த மெல்லிய கரத்திற்குரிய வாய் சொல்லியது நண்பரே அந்த 50 பைசாவை நான் கொடுக்கிறேன், என்றது வாஞ்சையுடன், அதன் பின்னர் எவ்வளவோ சம்பாதித்து விட்டேன் அந்த 50 பைசாவை மட்டும் என்னால் உணக்கு திருப்பி தரமுடியவில்லை.

உனது தந்தை காங்கிரஸ்காரராக இருந்த போதும் இந்திய படை செய்த அனியாயம் கண்டு கொதித்த கொதிப்பு இன்னமும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

யார் வீட்டு பிள்ளையோ, எந்த நாட்டு பிள்ளையோ என பாராது, இலையில் உனக்கும், எனக்கும் சோறு போட்டு, பக்கத்தில் இருந்து விசிறி கொண்டு சோற்றின் சூடு ஆற, உனது அன்னை விசிறிய காட்சி எனது மனதில் இன்னமும் ஆழமாக பதிந்து இருக்கிறது.

ஊரில் மீண்டும் யுத்தம் தொடங்கியபோதும், என்னற்றமரணங்கள் தொடர்ந்த போதும், அதற்கும் காரணம் காங்கிரஸ்தான் என உன்னிடம் நான் சொல்லி புலம்பிய போது, அமைதியாக நண்பரே என்னிடம் ஒரு பலமுள்ள ஆயுதம் இருக்கிறது, தக்க சமத்துக்காக அதை வைத்திருக்கிறேன் என்றாய், என்னவென வினவியபோது அதுதான், ஆட்சியை மாற்றி அமைக்கும் ஆயுதம், வாக்கு உரிமை என்றாய்,

தக்க தருணம் மே 13 இன்று, உனது வாக்கினை நீ காப்பாய், அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை, அதே போன்று இதற்காக காத்திருந்த எமது நண்பர்களும்......இதோ பொழுது புலர்கிறது, நண்பனே விடிந்து விட்டது....

நட்புடன்
என்றும் உன்
பிருந்தன்.

கருத்துகள் இல்லை:

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us