புதன், மார்ச் 04, 2009

சிறிலங்கா துடுப்பாட்டக் குழு மீது இந்தியாவே தாக்குதலை நடத்தியது: பாகிஸ்தான் அமைச்சர்!!!


பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் நேற்று சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் மீதான தாக்குதலை நடத்தியதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தானின் கப்பல்துறை அமைச்சர் சார்டர் நபில் அகமட் கபோல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் மீதான தாக்குதலை நடத்தியதன் பின்னணியில் இந்தியா உள்ளது.

தாக்குதலில் கலந்து கொண்ட குழுவில் இருந்த 3 பேர் இந்தியாவில் இருந்து எல்லை கடந்து பாகிஸ்தானுக்குள் வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

மும்பாய் பகுதியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா இதனை மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் மீது இந்தியா வெளிப்படையாக போர் பிரகடனத்தை மேற்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.

நன்றி>புதினம்

கருத்துகள் இல்லை:

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us