சனி, அக்டோபர் 06, 2007

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அதிக சக்தியுடன் பூமியை நோக்கிவரும் இராட்சத விண்கல்!!!

*ரஷ்ய வானியல் நிபுணர் அறிவிப்பு
பூமியை தாக்குவதற்காக வந்து கொண்டிருக்கும் இராட்சத விண்கல் ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததென ரஷ்ய வானியல் நிபுணரொருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரஷ்யாவிலுள்ள வானியல் ஆராய்ச்சி நிலையம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த இராட்சத விண்கல் 2029 ஆம் ஆண்டளவில் பூமியின் சுற்றுப் பாதையைக் கடக்கும்போது அப்பாதையிலிருந்து விலகி பூமியைத் தாக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கோள் மண்டலத் தொகுதியில் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றிவரும் கிரகங்களைப் போல சிறுசிறு உலோகக் கற்களும் சுற்றிவருகின்றன. இதில் அஸ்டிராயிட்ஸ் எனப்படும் ஏராளமான விண்கற்களில் அபோபிஸ் என்ற இந்த விண்கல்லும் ஒன்று.

அதிகூடிய வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இக்கல் அதே வேகத்திலேயே பூமியைத் தாக்கும் போது இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு ஏற்படுத்திய தாக்கத்திலும் பார்க்க ஆயிரம் மடங்கு அதிக சக்தி வெளிப்படுத்தப்படும்.

இத்தாக்கம் பூமியில் ஏற்படும்போது பூகம்பம் ஏற்படுவது போன்ற அதிர்வு ஏற்படுவதுடன் பேரழிவினையும் பூமி சந்திக்க நேரிடும்.

இருந்தாலும் அசுர வேகத்தில் பெருவளர்ச்சியினையும் வெற்றிகளையும் கண்டுள்ள விஞ்ஞானத்தின் நவீன தொழில்நுட்பத்தின் புதிய உத்திகளையும் செயற்கைக் கோள்களையும் பயன்படுத்தி இந்த இராட்சத விண்கலம் பாதையைத் திருப்பி பூமியை தாக்கத்திலிருந்து காப்பாற்றலாமென அவ்வூடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/news/2007/10/6/...s_page37806.htm

4 கருத்துகள்:

ரவி சொன்னது…

அண்ணே, அப்ப உலகம் அழியபோகுதா ?

வெரிகுட்...

தமிழ்பித்தன் சொன்னது…

அப்பாடி....??

Osai Chella சொன்னது…

punpatta manathai pukai vittu aarralaam thaane!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//இந்த இராட்சத விண்கலம் பாதையைத் திருப்பி பூமியை தாக்கத்திலிருந்து காப்பாற்றலாமென அவ்வூடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.//

பிருந்தன்!
இதைப் படித்ததும் 'சப்' பென்று போய்விட்டது.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us