திங்கள், செப்டம்பர் 03, 2007
ஈராக் பாஸ்ராவை விட்டு ஓடும் பிரித்தானிய இராணுவம்.
2003 இல் சதாம் குசைன் அணுகுண்டு உட்பட மனிதப் பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று கற்பனைக் கதை கட்டிக்கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்து எண்ணை வளத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க, பிரித்தானிய ஆக்கிரமிப்பு இராணுவங்களில் பஸ்ரா என்ற தென் ஈராக்கிய நகரில் நிலை கொண்டிருந்த பிரித்தானிய இராணுவம் அங்கிருந்து முற்றாக வெளியேறிக் கொண்டுள்ளது. பிற இடங்களில் இருந்தும் மெது மெதுவாக வெளியேறி வருகின்றது.
பிரித்தானிய இராணுவ வெளியேற்றத்தை ஈராக்கியப் போராளிகள் தங்கள் வெற்றியாகக் கொண்டாடி வரும் அதேவேளை தாங்கள் வெளியேறி வரும் பகுதிகளில் தங்களால் பயிற்றப்பட்ட ஈராக்கிய கூலிப்படைகளை பிரித்தானிய இராணுவம் நிறுத்தி வருகின்றது.
பிரித்தானிய இராணுவம் ஈராக் போரின் போது தானே தனித்து பஸ்ராவை விடுவித்தது என்பதும் அங்கு தீவிரவாதிகளின் தொடர்தாக்குதலுக்கு இலக்காகி 250 க்கும் மேற்பட்ட வீரர்களை பறிகொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்..!
இதற்கிடையில் அமெரிக்க வெடிவால் புஷ் இன்று ரகசிய ரகசியமாக ஈராக் போய் பத்திரமா மீண்டும் அமெரிக்கா போய் சேர்ந்துள்ளார். உலகின் வல்லாதிக்க அரசுத் தலைவர் ஒளிச்சு ஓடும் நிலைக்கு ஈராக்கில் அமெரிக்கப் படைகள் பலத்த சவாலைச் சந்தித்து நிற்கின்றன. ஈராக் இன்னொரு வியட்நாம் என்று தன் வாயாலேயே புஷ் உளறியிருந்தார் அண்மையில்..!
http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/6975375.stm
யாழ்.காமில் இருந்து............
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக