வியாழன், ஜூன் 07, 2007

விமானம் லேட்: தட்டிக் கேட்ட நாகை பயணிக்கு அடி உதை!

திருச்சி: கொழும்புக்கு சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரை கொழும்பு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

நாகை மாவட்டம் இருக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (41). இவர் உள்பட 130 பயணிகள் கொழும்பிலிருந்து திருச்சி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று பயணித்தனர்.

விமானம் நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கிளம்புவது தாமதமானது. அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் கிளம்பியது.

ஆனால் கிளம்பிய சில விநாடிகளிலேயே விமானம் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பயணிகளை தரை இறக்கிய ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமான நிலையத்திலேயே காத்திருக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் 11 மணிக்கு பயணிகளை விமானத்தில் ஏறுமாறு கூறினர். இன்னும் அரை மணி நேரத்தில் விமானம் கிளம்பும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்த பின்னர் மீண்டும் அனைவரையும் கீழே இறங்கி விமான நிலையத்தில் அமருமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த பயணிகள் என்ன பிரச்சினை என்று ஆவேசமாக கேட்டனர்.

அப்போது ஜாகிர் உசேன், சற்று கோபமாக, வேறு ஏதாவது ஏற்பாடு செய்யக் கூடாதா என்று கேட்டுள்ளார்.ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள், பயணிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்கியுள்ளனர்.

ஆனால் ஜாகிர் உசேனை மட்டும் இறங்க விடாமல் தடுத்த பாதுகாவலர்கள் அவரை விமானத்திலேயே அமர வைத்தனர். பின்னர் கைவிலங்கிட்டு புகைப்படம் எடுத்தனர். பிறகு சரமாரியாக அடித்து உதைக்க ஆரம்பித்தனர்.

வலி தாங்க முடியாமல் ஜாகிர் உசேன் போட்ட கூச்சலால், கீழே இறங்கிக் கொண்டிருந்த பயணிகள் வேகமாக விமானத்திற்குள் வந்தனர். அனைவரும் பாதுகாவலர்களைத் தடுத்து நிறுத்தி ஜாகிர் உசேனைக் காப்பாற்றி கீழே அழைத்துச் சென்றனர்.

இப்படியாக அலைக்கழிக்கப்பட்ட பயணிகள் ஒரு வழியாக திருச்சி வந்து சேர்ந்தனர்.
http://thatstamil.oneindia.in/news/2007/06/07/passenger.html

14 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இனி A.K.அந்தோணி சொல்லுவார் "இந்திய பயணிகளை அடித்து உதைப்பதற்கு இலங்கை அதிகாரிகளுக்கு எந்த தேவையும் இல்லை" என்று.

பெயரில்லா சொன்னது…

இனி அந்தோணி சொல்லுவார், அடித்து உதைத்தவர்கள் விடுதலைப் புலிகளின் விமானப் படை அதிகாரிகள் என்று

வடுவூர் குமார் சொன்னது…

எங்கூர்காரரை அடிந்தவர் எவராக இருந்தாலும் கண்டிக்கிறேன்.
வன்முறை,அதுவும் விமான அதிகாரிகளிடம்???

பெயரில்லா சொன்னது…

இந்தியா இலங்கையின் நட்பு நாடுதானே நட்புரீதியாக அடிவாங்குவதில் என்ன தப்பு? இது திராவிடக்குஞ்சுகளின் வீண்ஆர்பரிப்பு.

பெயரில்லா சொன்னது…

முகர்ஜி என்ன சொல்லப்போகிறார்? புலிகள்தான் காரணம் என ஒரு நாடகம் எப்போது?

பெயரில்லா சொன்னது…

முகர்ஜி என்ன சொல்லப்போகிறார்? புலிகள்தான் காரணம் என ஒரு நாடகம் எப்போது?

நம்ம காங்கிறஸ் குஞ்சுகள் என்ன சொல்கிறார்கள்?

பெயரில்லா சொன்னது…

முகர்ஜி என்ன சொல்லப்போகிறார்? புலிகள்தான் காரணம் என ஒரு நாடகம் எப்போது?

நம்ம காங்கிறஸ் குஞ்சுகள் என்ன சொல்கிறார்கள்?

Thekkikattan|தெகா சொன்னது…

இது போன்று மூன்றாம் தரமான விமானச் சேவை செய்யும் விமானங்களில் எல்லாம் ஏன் இப்படி கனெக்டிங் டிக்கெட் போட்டுச் செல்ல வேண்டும். முற்றிலுமாக புறக்கணிக்கப்பட வேண்டியதுதான் கொழும்பு ஏர்லைன்ஸ்.

என்ன ஒரு காட்டு மிராண்டித்தனம்.

ALIF AHAMED சொன்னது…

நாகை மாவட்டம் இருக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (41).

///

இது எனது அண்ணன் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்...::((

ALIF AHAMED சொன்னது…

இந்த நியூஸை பார்த்துதான் வீட்டுக்கு போன் பண்ணி கேட்டு செய்தியை உறுதி படுத்தி கொண்டு இங்கு பதிகிறேன்..


மட்டமான கஸ்டமர் சேவை...:(

பெயரில்லா சொன்னது…

//இது போன்று மூன்றாம் தரமான விமானச் சேவை செய்யும் விமானங்களில் எல்லாம் ஏன் இப்படி கனெக்டிங் டிக்கெட் போட்டுச் செல்ல வேண்டும். முற்றிலுமாக புறக்கணிக்கப்பட வேண்டியதுதான் கொழும்பு ஏர்லைன்ஸ்.

என்ன ஒரு காட்டு மிராண்டித்தனம்//



Thanks for the post.

Sri lankan Airlines Should be boycotted.

பெயரில்லா சொன்னது…

Becareful with this airline, when you book them with kids, though you may have confirmed tickets , at airport your kids tickets turn out as unconfirmed and they ask your kids to travel in your laps, i thing they give this tickets to somebody else

பெயரில்லா சொன்னது…

//இந்த நியூஸை பார்த்துதான் வீட்டுக்கு போன் பண்ணி கேட்டு செய்தியை உறுதி படுத்தி கொண்டு இங்கு பதிகிறேன்..


மட்டமான கஸ்டமர் சேவை...:(//



:((((((

பெயரில்லா சொன்னது…

It's an exaggerated story by Tigers and their TN supporters. It couln't have happened in Colombo because Sinhalese would want foreingers to come to their country to rebuild their tourism industry which was shattered after LTTE air strikes. There may have been any inconveniences caused by delay but LTTE supporters deliberately making it a big news and thereby Turning Indian travellers from not coming to Colombo airport.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us