திங்கள், பிப்ரவரி 12, 2007

இலங்கை அகதிகளுக்கு உதவியளிக்க தமிழக திரைப்படத்துறை முன்வருகை.

-நிதி சேகரிக்க நட்சத்திர நிகழ்ச்சிக்கு திட்டம்

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடனும் அகதிகளின் புனர்வாழ்வுப் பணிகளுக்கு நிதி சேகரிக்கவும் சென்னையிலுள்ள திரைப்படத்துறையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிணைப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிவாஜிலிங்கம், எஸ். அரியநேத்திரன், எஸ். பத்மநாதன் ஆகியோர் தமிழ்நாட்டின் திரைப்படத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களுடன் சந்திப்புகளை நடத்தியிருக்கின்றனர். நடிகர் சங்கத்துடனான இந்தச் சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், சிரேஷ்ட நடிகை மனோரமா, எஸ்.எஸ். சந்திரன், அப்பாஸ் ஆகியோருடனேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.

இவர்களில் சரத்குமாரும், எஸ்.எஸ். சந்திரனுடன் நடிப்புத் தொழிலுடன் அரசியலிலும் ஈடுபட்டிருப்பவர்களாகும்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் சிவாஜிலிங்கம், தமிழ்நாடு பூராகவும் நட்சத்திர நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்நிகழ்ச்சிகள் மூலம் கடந்த ஒரு வருடத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்திருக்கும் 2 இலட்சத்து 10 ஆயிரம் அகதிகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ் நட்சத்திரங்கள் வீதிக்கு இறங்கி இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் அட்டூழியங்களை கண்டித்து பேரணிகளை நடத்தும் போது 1983 இன் நிலைமைக்கு விரைவில் தமிழகம் வந்துவிடுமெனவும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

இதற்கு முன்பாகவே விடுதலைப் புலிகள் தமிழக திரைப்படத்துறையுடன் தொடர்புகளை உருவாக்கியுள்ளனர் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்றுத் தெரிவித்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வன்னியில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா ஆகியோரை சந்தித்திருக்கிறார்.

http://www.thinakkural.com/news%5C2007%5C2...s_page21120.htm

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

what happend to your Mps.
They met Anti DMK Actors.
Do you think it is a right way in Tamil nadu?

மாசிலா சொன்னது…

மிக நல்ல செய்தி அன்பரே.
தமிழ் உள்ளங்கள் பயணடைவர் என நம்புவோம்.

தமிழ்நதி சொன்னது…

அது சரி இந்தச் செய்தியை ஏன் நகைச்சுவை நையாண்டிப் பகுதியில் போட்டிருக்கிறீர்கள்...? தமிழ்மணத்தில் எதைப் பார்த்தாலும் உள்குத்து இருக்குமோ என்ற எண்ணம் ஓடுவதைத் தவிர்க்க முடியவில்லை பிருந்தன்.

பிருந்தன் சொன்னது…

தமிழ்நதி நம்ம மக்கள் ரெம்ப ரெம்ப உசார் பேர்வழிகள், நான் பதிவை ஏற்ரும் போது, தமிழ்மணத்திலோ அல்லது எனது புளக்கிலோ ஏதோதகராரு அதனால் என்னால் வகைப்படுத்தமுடியவில்லை, அந்த சந்தில் யாரோ சிந்து பாடிவிட்டார்கள். நம்ம மக்கள் கிட்ட ரெம்ப ரெம்ப உசாரா இருக்கனும்:-))

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us