காதலெனும் தீவினிலே
நான் ஓடமாய் காத்திருந்தேன்!
ஓடம் நான் ஓட்டிடவே
கடல் தன்னை கானவில்லை!
தண்ணீர் இல்லா ஓடமெதற்கு
காதல் இல்லா வாழ்வெதற்கு!
காத்திருந்தேன் தீவினிலே
உணை நான் பாத்திருந்தேன்!
காத்திருந்தும் நீ வரவில்லை
கடல் மட்டும் வந்து சேர்ந்தது!
வந்த கடல் கதை கூறி சென்றது
அது உன் கண்ணீரென்று சொன்னது!
கடல் அளவு கண்ணீர் வடித்திடவே
உனக்கு என்ன துன்பம் நேர்ந்துவிட்டது!
ஓடத்திலே ஓடிவந்தேன் உனைதேடி
ஓடி வந்த ஓடம் தன்னும் நிண்றுவிட்டது!
ஓடிய ஓடம் நின்றதேன்
உன் கண்ணீரும் உறைந்ததேன்!
உப்புப் பாறையில் நான்
துக்கப் பார்வையில் நீ!
தூள் தூளாகாதோ இப்பாறை
திறந்திடாதோ உன் சிறை.
2 கருத்துகள்:
அப்பாடா ஜெர்மனியிலிருந்து இன்னுமோர் காதல் கவியா? கவிதை நன்றாக இருக்கிறது பிருந்தன்.
வணக்கம் வாங்க தர்சன் நீங்களும் ஜேர்மனியா? கலக்குங்க கலக்குங்க.
கருத்துரையிடுக