இன அழிவைத் தடுக்குமாறு தமிழர்கள் பேரணிகள் நடத்த, ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு சொல்கின்றது உலகம். உருப்படியான அரசியல் தீர்வை கொண்டு வந்தால், ஆயுதங்களுக்கான தேவையே இருக்காது என்கின்றனர் விடுதலைப் புலிகள். போரும், இனப்படுகொலையும் தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் நிலைமையை ஆராய்கின்றார் தி.வழுதி. |
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு இந்த முழு உலகமும் முனைப்புப்பெற்று நிற்கின்றது என்பது எம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விடயம்.
விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு மேற்குலகம் சொன்னதையிட்டோ, ஆயுதங்களைக் கைவிடுமாறு இந்தியா சொன்னதையிட்டோ அவற்றின் மீது எனக்கு அவ்வளவாகக் கோபம் வரவில்லை. மேற்குலகிடமும், இந்தியாவிடமும் வேறு எதனை நாம் எதிர்பார்க்க முடியும்...? தமிழீழத்தின் 80 வீதமான நிலத்தை விடுதலைப் புலிகள் ஆளுகை செய்த காலத்தில் - வீதிகளில் இறங்கி, "விடுதலைப் புலிகள் தான் எம் அரசியல் பிரதிநிதிகள்" என்று நாம் முழங்கியிருக்க வேண்டும்; "தமிழீழத் தனியரசுக்கான எமது போராட்டத்தை அங்கீகரியுங்கள்" என மேற்குலக அரசுகளை வற்புறுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் - "நீங்கள் பணத்தை கொடுத்தால் போதும்; ஊரில் எல்லாம் பார்த்துக்கொள்வார்கள்" என்று புலம் வாழ் தமிழர்களைப் பார்வையாளர்களாக வைத்திருந்தது தான் இந்தச் செயற்பாடுகளின் மைய ஓட்டமாக இருந்த வந்தது. இந்தவிதமான அணுகுமுறை தான் - விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அரசியல் முன்னெடுப்புக்கள் வெளிநாடுகளில் தேவையற்றவை என்ற எண்ணத்தையும், வெளிநாட்டுத் தமிழர்களின் வெளிப்படையான அரசியல் ஆதரவுகள் இல்லாமலேயே விடுதலைப் புலிகள் போரை வெல்வார்கள் என்ற நம்பிக்கையையும், ஊரில் புலிகள் வெற்றிவாகை சூடி இந்த உலகத்தின் போக்கையே தமிழர்க்குச் சார்பாக மாற்றுவார்கள் என்ற மாயையும் புலம் வாழ் தமிழ் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உருவாக்கி -
இப்போது நாங்கள் இரண்டு விடயங்களில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இப்போது நாம் செய்ய வேண்டியது - விருப்பு வெறுப்புக்களை ஒர் ஓரத்தில் வைத்துவிட்டு - யதார்த்தத்தைப் பார்க்க முனைவது.
விடுதலைப் புலிகள் இயக்கம் - தமிழர் சரித்திரம் மட்டுமல்ல, இந்த உலக சரித்திரமே கண்டிராத ஓர் ஆச்சரிய உண்மை.
கடந்த 61 ஆண்டு கால தமிழர்களின் சரித்திரத்தைப் படித்து, அவதானித்து, அதற்குள் வாழ்ந்து பார்த்த பின் ஒரு விடயத்தை நாம் எந்தச் சலசலப்பும் இல்லாமல் மிகத் தெளிவாக ஏற்றுக்கொள்ள முடியும். விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல. நாங்கள் இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கின்ற ஒரு சாதாரண சிறிய மக்கள் குழு அல்ல; நாங்கள் இந்த உலகின் மிகப் பழையான - உயர் பண்புகளை உடைய - சுயமரியாதை மிக்க - ஒன்பது கோடி உயிர்களைக் கொண்ட - ஒரு மிகப் பெரிய தேசிய மக்கள் இனம். அது நாங்கள் பெருமைப்பட வேண்டிய விடயம். விடுதலைப் புலிகள் இயக்கம் தான் எமது தமிழ் தேசிய இனத்தினது பெருமைகளின் முகமாக இந்த உலகில் இன்று விளங்குகின்றது. புலிகள் இயக்கத்தைப் "பயங்கரவாதிகள்" என்று இந்த உலகம் சொல்லுவது - முழுத் தமிழ்த் தேசிய இனத்தையுமே "பயங்கரவாதிகள்" என்று சொல்லிச் சிறுமைப்படுத்துவது போன்றதாகும். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்த உலகத்திற்கு நாம் தெளிவுபடுத்த வேண்டும். தமிழர்களுக்கான உலக அடையாளமாக, தமிழர்களின் அரசியல் அபிலாசைகளின் குறியீடாக, தமிழர்களின் இன்பங்களினதும் துன்பங்களினதும் வெளிப்பாடாக, உலகத் தமிழினம் முழுவதையும் ஒன்றிணைக்கும் - ஒற்றுமையாக்கும் - ஒரு புனிதப் பொருளாக - ஒரு தாயிற்குச் சமமாக, அந்தக் கொடி தான் விளங்குகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இவை எல்லாவற்றினதும் காவலர்.
எமது உடனடிப் பணி விடுதலைப் புலிகள் அழிந்து போவதற்கும், "இனப் படுகொலை" பூதம் வெளியே வருவதற்கும் இடையில் இருக்கும் சிறிய இடைவெளியில் புகுந்து விளையாடி - தமிழர்களைத் தாங்கள் காப்பாற்றி விட்டது போல நடிப்பதற்காக இந்த உலகம், தமிழர்கள் கொல்லப்படுவது தெரிந்திருந்தும் வஞ்சகமாகக் காத்திருந்தது. இந்த உலகத்திற்கு தான் கொடுத்த நம்பிக்கையையும், இந்த உலகத்தின் எதிர்பார்ப்புக்களையும் சிறிலங்காவால் காப்பாற்ற முடியவில்லை. இந்த உலகத்தின் கவனத்தையும் நாங்கள் தேவையான அளவுக்கு ஈர்த்தாகி விட்டது: இப்போது - ஏதாவது செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்த சூழலுக்குள் உலக நாடுகள் தள்ளப்பட்டுவிட்டன. இரண்டாவது - இந்த இரண்டு விடயங்களுக்குமான உலக அங்கீகாரத்தைப் பெறுவதை நோக்கி - தமிழர் செயற்பாடுகள் எல்லா வழிகளிலும் - எல்லா முறைகளிலும் - முன்னெடுக்கப்பட வேண்டும். எப்போதாவது ஏதாவது செய்வதற்கு நாம் இதுவரை காத்திருந்தோம் எனில், நாம் செயற்படுவதற்கான அந்த சரியான நேரம் இதுவே தான்! நன்றி்>புதினம் |
வெள்ளி, பிப்ரவரி 27, 2009
விடுதலைப் புலிகளிடம் இருந்து வன்னி மக்களை காப்பது எப்படி?
செவ்வாய், பிப்ரவரி 24, 2009
ஈழத் தமிழர் பிரச்சனையும் காங்கிரஸ் கட்சியின் திடீர் அக்கறையும்
ஆளும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி, திடீரென்று ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் தமது நிலைப்பாட்டை விளக்கிச் சொல்லும் முயற்சியில் இறங்கியிருக்கின்றது. இந்த திடீர் முடிவின் பின்புலம் என்னவாக இருக்க முடியும்? அது வேறு ஒன்றுமல்ல, விரைவில் ஒரு தேர்தல் வரவிருப்பதும் குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு படிப்படியாக மங்கிக் கொண்டு செல்வதுமே இந்த திடீர் அக்கறைக்கான காரணம்.
சில தினங்களுக்கு முன்னர் பேசிய ஆளும் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஈழத்தில் நடைபெறும் அனைத்து இன்னல்களுக்கும் விடுதலைப்புலிகளே காரணம் என்றும் குறிப்பாக புலிகளின் தலைவர் பிரபாகரனின் சர்வாதிகார விருப்பமும், தான் மட்டுமே இருக்க வேண்டுமென்ற எதேச்சாதிகார போக்குமே இவ்வளவிற்கும் காரணம் என்று குறிப்பிட்டிருக்கின்றார். காங்கிரஸைப் பொருத்தவரையில் ஈழத் தமிழர் விடயத்தில் வக்காலத்து வாங்குவதற்கு சிதம்பரத்தை விட்டால் வேறு பொருத்தமான நபர் கிடைக்கமாட்டார். இதனால்தான் சிதம்பரத்தை காங்கிரஸ் சந்தர்ப்பம் பார்த்து களமிறக்கியிருக்கின்றது.
சிதம்பரம் தன்னை அறியாமலேயே ஒரு உண்மையை இங்கு வெளிப்படுத்தியிருக்கின்றார�
�. இன்று மிகப் பெரும் மனித அவலத்தை விளைவித்திருக்கும் போரின் பின்னால் இந்தியா இருக்கின்றது என்பதை அவரது பேச்சு வெள்ளிடைமலையாக்கியுள்ளது. அதாவது அனைத்து பிரச்சனைக்கும் புலிகளே காரணம் என்று விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டியிருக்கும் சிதம்பரம் இங்கு குறிப்பிட்டிருக்கும் கருத்தொன்று மிக முக்கியமானது. அதாவது புலிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை காலில் போட்டு மிதித்த போதும் தாம் அமைதியாகவே இருந்ததாகவும் 1991இல் ஸ்ரீபெரும்புத்தூரில் இடம்பெற்ற அந்த சம்பவத்திற்குப் பின்னாலேயே புலிகளை ஈழத் தமிழர்களின் பிரதிநிதியாக கருத முடியாது என்ற நிலைக்கு தமது கட்சி வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வந்தால் இலங்கை அரசை பேச்சுவார்த்தையைத் தொடருமாறு தம்மால் வற்புறுத்த முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். (மூலம் -பி.பிசி வானொலி- 16,02,2009)
ஆனால் இதற்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்த சிதம்பரம் இலங்கை விவகாரம் ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்றும் அதில் ஓரளவிற்குமேல் தம்மால் தலையிட முடியாதென்றும் குறிப்பிட்டிருந்தார். இப்பொழுது எப்படி தலையிடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது? இங்கு உட்பொதிந்து கிடக்கும் உண்மை என்னவென்றால் காங்கிரஸ் எப்போது விடுதலைப்புலிகளை ஈழத் தமிழர்களின் பிரதிநிதியாகக் கருத முடியாது என்று தீர்மானித்ததோ அன்றிலிருந்தே ஈழப் போராட்ட அரங்கிலிருந்து புலிகளை அகற்ற வேண்டுமென்ற நோக்கில் செயலாற்றி வருகின்றது என்பதுதான் அது. இதற்காக பல்வேறு நாசகார வேலைகளை இந்திய வெளியக புலனாய்வு அமைப்பான றோவுடன் இணைந்து காங்கிரஸ் நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது. நோர்வேயின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து மகிந்தவின் அதீத தமிழர் விரோத அரசியலை, புலிகளை அகற்றுவதற்கான அரசியல் இடைவெளியாக காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது.
ஆனால் இதில் காங்கிரஸ் கணிக்காத, குறிப்பாக பாப்பனிய அதிகாரிகளால் வழிநடத்தப்படும் றோ கணிக்காத ஒரு விடயம் நடந்திருக்கிறது அதாவது ராஜீவ் விடயத்தை வைத்து தொடர்ந்தும் தமிழக மக்களை தமது பொய்ப் பிரச்சாரங்களில் அமுக்கிவைக்க முடியுமென்ற அவர்களது கணிப்பு தமிழக மக்களின் அர்ப்பணிப்பு மிக்க எழுச்சியாலும் இடையறாத போராட்டகளினாலும் தவிடு பொடியாவிட்டது. இந்தளவு தூரம் தமிழக மக்கள் எழுச்சியடைவார்கள் என்று றோ கணிக்கவில்லை. இதனால்தான் தற்போது ஆற்றுப்படுத்தல் வேலைகளில் காங்கிரஸ் இறங்கியிருக்கிறது.
இன்று இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கைகள் அனைத்தும் அதிகாரிகள் மட்டத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றது. சமீபத்தில் இது பற்றி கருத்துத் தெரிவித்திருந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், இந்தியாவின் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய தலைவர்கள் தற்போது இந்தியாவில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸின் தான்தோன்றித்தனமான அணுகுமுறைகளைப் பார்க்கும்போது அது முற்றிலும் சரியானதொரு கணிப்பாகவே இருக்கிறது. இன்று இலங்கை தொடர்பான அனைத்து முடிவுகளும் குறிப்பான சில றோவின் அதிகார பிரிவினராலேயே மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக நாராயணன் வகை அதிகாரிகளால். இதில் முக்கியமாக இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. றோவின் வரலாற்றிலேயே பெருத்த அவமானத்தை சந்தித்த ஈழத் தமிழர் விவகாரத்தை காங்கிரஸின் ஆசியோடு மீண்டும் கையாண்டு தோல்வியை சரி செய்து கொள்வது. இரண்டு அன்று அடைய முடியாமல் போன புலிகளை அழித்து அல்லது எதிர்வினையாற்ற முடியாதளவிற்கு முடக்கி, தாம் தீர்வு என்று நினைக்கும் ஒன்றைத் திணிப்பது.
அன்று Intelligent Bureau (IB) என்னும் புலனாய்வு பணியகத்தின் தலைவராக இருந்தவர்தான் இந்த நாராயாணன். அன்று உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தவர்தான் இந்த சிதம்பரம். இதில் நாராயணின் கணிப்பு தமிழக மக்கள் இளிச்சவாயர்கள். அவர்களால் பெரிதாக எதனையும் செய்ய முடியாது. அப்படி மீறிப் போனாலும் ஆட்சியைப் பிடுங்கிவிடுவோம் என்று கருணாநிதியை, மிரட்டினால் தாங்கள் செய்ய வேண்டியதை கருணாநிதியே செய்துவிடுவார். ஆனால் தற்போது தமிழகத்தில் தன்னிச்சையாக எழுச்சியடைந்திருக்கும் மாணவர் போராட்டங்கள், வழங்கறிஞர்கள் போராட்டங்கள் போன்றவைகள் அவர்கள் கணிக்காத ஒன்றுதான். புரட்சிகர எண்ணங்கள் மக்களுக்குள் சருகாக கிடக்கின்றன. தேவை சிறு தீப்பொறி மட்டுமே என்ற உண்மையை ஆக்கிரமிப்பு சக்திகள் ஒருபோதும் விளங்கிக் கொள்வதில்லை. அவர்களது பலவீனம் எதுவோ அதுவே நமது பலம்.
- தாரகா (t.tharaga@yahoo.com)
- கீற்று - மாசி 2009
வெள்ளி, பிப்ரவரி 20, 2009
Tamils set for Geneva mass march over Sri Lanka-UN
Tamils set for Geneva mass march over Sri Lanka-UN
Thu Feb 19, 2009 1:36pm EST
GENEVA, Feb 19 (Reuters) - About 20,000 Tamils from across Europe are expected to protest in Geneva on Friday at Sri Lanka's military offensive against Tamil rebels, the United Nations said on Thursday.
Police in the Swiss city, which is home to the U.N. European headquarters and to many Tamil immigrants, said 200 buses from across Europe were expected to bring protesters in.
Demonstrators were expected to wind through Geneva in the afternoon and then rally in the public square in front of the U.N.'s Palais des Nations complex, where Tamils held smaller protests in past weeks as fighting intensified in Sri Lanka.
A Tamil man in his mid-20s killed himself by pouring gasoline on his body and setting himself alight during one demonstration last week.
One organiser said at least 10,000 Tamils were travelling from Britain, joining others from Switzerland, Germany, France, Norway and the Netherlands.
U.N. staff in Geneva said they had been told to go home from mid-day. Security was being tightened at the Palais des Nations, where 1,600 people work, a U.N. statement said.
The Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebels have fought for a quarter century for an independent homeland in Sri Lanka's northeast, but an army offensive has now cornered them in a small wedge of jungle.
The government formally abandoned a six-year-old Norwegian- brokered ceasefire a year ago.
John Holmes, the top U.N. humanitarian official, urged rebels and the government on Thursday to protect civilians. Around 36,000 have fled the war zone to government-run camps. (Reporting by Stephanie Nebehay; Editing by Laura MacInnis and Phakamisa Ndzamela)
செவ்வாய், பிப்ரவரி 17, 2009
மக்கள் தொலைக்காட்சிக்கு யாழ்ப்பாணத்திலும் தடை
தமிழக தொலைக்காட்சிகளை யாழ்ப்பாணத்தில் ஒளிபரப்பு செய்வதற்கு சிறிலங்கா இராணுவம் தடை விதித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஒளிபரபாகும் மக்கள் தொலைக்காட்சிக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுவரும் அழிவுகளை மக்கள் தொலைக்காட்சி மட்டுமே பெரும்பாலும் காண்பித்து வருக்கின்றது. வன்னியில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு வரும் இழப்புக்களை மக்கள் தொலைக்காட்சியே தொடர்ச்சியாக காண்பித்து வருகின்றது.
இது யாழ்குடா மக்களை சென்றடையாது தவிர்ப்பதற்கு படையினர் இந்தத் தடையை விதித்துள்ளனர். இத் தொலைக்காட்சி இணைப்புகளை வழங்குபவர்களுக்கும் வழங்கக்கூடாது என எச்சரித்துள்ளனர்.
முன்னதாக வவுனியாவிலும் இவ்வாறான உத்தரவை படையினர் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் கலைஞர் ரிவி, ஜெயா ரிவி, சண் ரிவி, மக்கள் தொலைக்காட்சி என்பன ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
நன்றி:- சங்கதி
ஞாயிறு, பிப்ரவரி 15, 2009
வியாழன், பிப்ரவரி 05, 2009
இலங்கை இனப்படுகொலை; இந்தியாவும் குற்றவாளியா? : அமெரிக்க முன்னாள் அமைச்சு செயலர்கள் அறிக்கை!!!
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவுக்கு அமெரிக்காவை பொருளாதாரச் சரிவிலிருந்து காப்பாற்றுவது, ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது, ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவருவது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் இவைகளைவிட முக்கியமான பிரச்சினை இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துவதுதான் இதற்கே அமெரிக்க அதிபர் முன்னுரிமை தரவேண்டும் என்று அமெரிக்காவின் முன்னாள் உள்துறைச் செயலாளர் மேடலின் ஆல்ப்ரைட்டும், பாதுகாப்புத் துறைச் செயலாளர் வில்லியம் எஸ்.கோஹனும் கூறியிருக்கின்றார்கள்.
இதுபற்றிக் கூட்டாக அறிக்கையொன்றை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
”தேச எல்லைகள் என்பவை சர்வதேசப் பிரச்சினைகளைத் தடுத்து நிறுத்தப் பயன்படுவதில்லை. இனப்படுகொலைகள் தடுக்கப்படாவிட்டால், அவை அமெரிக்காவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறிவிடும்!” என்று அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
இனப்படுகொலைகள், பலவீனமான நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மையை அழிக்கின்றன. அவற்றிலிருந்துதான் பயங்கரவாதத்துக்கு ஆட்கள் வந்து சேர்கிறார்கள். அந்த நாடுகளை அது பாதிப்பது மட்டுமின்றி, சர்வதேச சமூகத்தையும் பாதிக்கிறது. அகதிகள் பெருகி, அண்டை நாடுகளில் தஞ்சம் புக நேர்கிறது.
இனப்படுகொலைகளை வேடிக்கை பார்த்தால், அமெரிக்காவின் மதிப்பு உலக அரங்கில் கேள்விக்குரியதாகி விடும். இப்படியான படுகொலைகள் நடக்கும் நாடுகளில் கடைசியாக அமெரிக்கா இராணுவரீதியில் தலையிட நேர்கிறது. ஆனால், தொடக்கத்திலேயே இதைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா முன்வரவேண்டும். என்று வலியுறுத்தியிருக்கும் அவர்கள், ஒபாமாவுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருக்கிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அதிபரின் பணி முதல் நாளில் இருந்தே தொடங்கிவிடுகிறது என்பதை நாங்கள் அறிவோம். இனப் படுகொலைகளைத் தடுப்பதும், வெகுமக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துவதும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் என்று நாங்கள் கருதவில்லை. இது நம்முடைய தார்மீகக் கடமை. இராணுவ ரீதியான முன்னுரிமை என்று மேடலின் ஆல்ப்ரைட்டும், வில்லியம் எஸ்.கோஹனும் அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்�
�ள்.
இனப்படுகொலை குறித்து இவர்கள் பேசியிருப்பது, இலங்கைப் பிரச்சினைக்கு மிகவும் தொடர்புடையதாக இருக்கிறது. இலங்கையில் நடப்பது, தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைதான் என்பதை சர்வதேச அமைப்புகள் பலவும் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
அண்மையில், சென்னைக்கு வந்திருந்த அமெரிக்க முன்னாள் ‘டெபுடி அசோசியேட் அட்டர்னி ஜெனரல்’ புரூஸ் ஃபெயின் இதுபற்றி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகச் சொல்லியிருப்பதை நாம் அறிவோம்.
அமெரிக்கக் குடியுரிமை பெற்ற கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் அமெரிக்க கிரீன்கார்டு பெற்றவரான இலங்கை இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா ஆகியோர் மீது வழக்குத் தொடரப்போவதாக ஃபெயின் கூறியிருந்தார். இனப்படுகொலைகளைச் செய்ததாகத்தான் அவர்கள்மீது ஃபெயின் குற்றம் சாட்டியிருந்தார்.
ஐ.நா. சபை 1948-ம் ஆண்டிலேயே இனப்படுகொலைகள் குறித்து ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது. அதில் இலங்கை, இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ‘இனப்படுகொலை என்றால் என்ன?’ என்பதற்கு அந்த ஒப்பந்தத்தில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு தேசிய, இன, மத, சமூகக் குழுவை முற்றிலுமாகவோ பகுதியாகவோ அழிக்கும் நோக்கோடு அக்குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது; உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ காயப்படுத்துவது; அக்குழுவை அழிக்கும் விதமான சூழ்நிலையை ஏற்படுத்துவது; அக்குழுவின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது; அக்குழுவிலிருந்து குழந்தைகளை வேறு குழுவுக்கு மாற்றுவது ஆகியவை இனப்படுகொலை எனப்படும். என்று ஐ.நா. ஒப்பந்தம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
இனப்படுகொலையைச் செய்தாலும், இனத்தை அழிக்க சதி செய்தாலும், அப்படிச் செய்வதற்குத் தூண்டினாலும், செய்ய முயன்றாலும், இனப்படுகொலைக்கு ஒத்துழைத்தாலும் குற்றமாகக் கருதப்படும். அந்தக் குற்றத்தை செய்தது, தனி மனிதராகவோ ஒரு அரசாகவோ இருந்தாலும் அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின்கீழ் விசாரித்துத் தண்டிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழி செய்துள்ளது.
தற்போது இலங்கையில் நடந்துவருவது இன அழித்தொழிப்புதான், இனப்படுகொலைதான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை புரூஸ் ஃபெயின் திரட்டியிருக்கிறார். 1983-ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தின்போது, ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது முதல் இப்போது சிங்கள இராணுவத்தின் மூன்று படைகளும் சேர்ந்து தமிழர் மீது நடத்திவரும் தாக்குதல் வரை அவர் ஏராளமான சான்றுகளை இதற்காகச் சேர்த்திருக்கிறார்.
இலங்கை அரசியலமைப்புச் சட்டமே இனச் சமத்துவத்துக்கு எதிராக இருப்பதையும், இன்றைய ஆட்சியாளர்கள் ‘ஒற்றைத் தன்மை கொண்ட ஆட்சிமுறைதான் சாத்தியம்’ என்று சொல்வதையும்கூட அவர் உதாரணங்களாகக் காட்டுகிறார். சிங்கள இனவெறிக்கு ஆதாரமாக அவர்களின் புராணக் கதையான மகாவம்சம் எவ்வாறு விளங்குகிறது, அங்குள்ள பௌத்த பிக்குகள் எப்படி இனவெறியைப் பிரசாரம் செய்கிறார்கள் என்பதையெல்லாம் புரூஸ் ஃபெயின் விரிவாகத் தொகுத்திருக்கிறார்.
இலங்கையில் நடப்பது இனப்படுகொலைதான் என்பதற்கு ஆயிரக்கணக்கான ஆதாரங்களை நாம் அடுக்க முடியும். இப்படியான இன அழித்தொழிப்பில் ஈடுபட்ட பல்வேறு சர்வாதிகாரிகள் இன்று சர்வதேச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளும், அதில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட்டிருப்பதும் அண்மைக் கால உதாரணங்களாகும்.
அதுபோல, கோத்தபாய ராஜபக்ஷவும், சரத் ஃபொன்சேகாவும் தண்டிக்கப்படுகிற காலம் வெகுதொலைவில் இல்லை. இனப்படுகொலை குற்றத்திலிருந்து ராஜபக்ஷவும் தப்பிக்க முடியாது.
ஆனால், குற்றவாளிகள் அவர்கள் மட்டுமல்ல.இதில் இந்திய அரசும் பதில் சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறது.
இனப்படுகொலைக்கு எதிரான ஐ.நா. ஒப்பந்தத்தின் உறுப்பு 3 பிரிவு 5-ல் இனப்படுகொலைக்கு ஒத்துழைப்பு நல்குவதும் கூட குற்றமாகவே கருதப்படுமெனச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிப் பார்த்தால், இலங்கை அரசின் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்தாசை செய்துகொண்டிருக்கிற இந்தியாவும் குற்றவாளியாகவே கருதப்படக் கூடிய ஆபத்து உள்ளது’ என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது, ராடார் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவது, தமிழர்களுக்கு எதிரான போரில் இராணுவ ரீதியான வியூகங்களை வகுத்துத் தருவது, நிபுணர்களின் ஆலோசனைகளை அளிப்பது உட்பட பல உதவிகளை இந்தியா அளித்து வருவதான குற்றச்சாட்டுகள் இலங்கை தமிழ் அமைப்புகளாலும், இங்குள்ள அரசியல் கட்சிகளாலும் எழுப்பப்பட்டு வருகின்றன.
அவற்றை இந்திய அரசு மறுத்துவிடவில்லை. இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் என்று அவற்றையெல்லாம் இந்திய அரசு நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், ஐ.நா. ஒப்பந்தப்படி இவையெல்லாம் இனப்படுகொலைக்கு உதவிய குற்றமாகவே கருதப்படும்’ என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே இலங்கையோடு இந்தியா கொண்டுள்ள உறவு என்பது, அங்கு வாழும் தமிழர்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் கேடு விளைவிப்பதாகவே உள்ளது. இந்திய வம்சாவளி தமிழர்களை இங்கே அழைத்து வருவதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தம், கச்சதீவை தாரைவார்த்துத் தருவதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தம் என இதற்கான சான்றுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
முந்நூறுக்கும் அதிகமான இந்திய குடிமக்களை (மீனவர்களை) இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்றபோதிலும், அதற்கு இந்தியா எவ்வித நடவடிக்கையும் எடுக்காததும் கூட இத்துடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய விஷயமாகும்.
புரூஸ் ஃபெயினின் வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டால், இந்தியாவுக்கு எதிரான வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படுவதும் உறுதியாகி விடும். நம்முடைய ஆட்சியாளர்கள் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவது, இந்திய குடிமக்களான நம் எல்லோருக்குமே அவமானம்தான். இதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. தங்களுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் இந்திய வெளியுறவுக் கொள்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் இந்திய ஆட்சியாளர்களைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமை தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்திய பிரஜைகள் எல்லோருக்குமே இருக்கிறது.
தற்போது இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையைப் பற்றி எடுத்துரைத்து, அது எப்படி இந்தியாவின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதை தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு விளக்கவேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டின் தலைவர்களுக்கு உள்ளது. இங்கே எழுச்சிமிகுந்த போராட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், தொலை நோக்குக் கொண்ட இத்தகைய கடமையையும் அவர்கள் ஆற்றுவதற்கு முன்வர வேண்டும்.
ஈழப் பிரச்சினைக்காகத் தன்னையே எரித்துக் கொண்ட முத்துக்குமாரின் உணர்ச்சிகளை நாம் மதிப்போம். ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே போதாது. அறிவு பூர்வமாகச் செயல்படுவதற்குத் தவறினோமென்றால், நம்மை எதிர்கால சந்ததியினர் மன்னிக்க மாட்டார்கள்!
http://www.nerudal.com/nerudal.317.html

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us