வியாழன், ஜூன் 08, 2006
சொந்தம் ஆகிவிட்ட காதல்.
உன் பார்வை எனக்கு கிடைத்துவிட
என் பாதையை நான் மறந்து விட்டேன்!
அவ்வழி நீபோவது கண்டால்
இவ்வழி நான் ஏங்குவது உண்டு!
சேர்ந்து நீ உன் அன்னனுடன் போகையில்
சோர்ந்து இருப்பேன் அன்று முழுதும்!
கடைக்கண் பார்வை கிடைத்திடவே
கடை வீதியில் காத்திருப்பேன்!
தூரத்தில் நீ வருதல் கண்டால்
ஓரத்தில் நான் பார்த்திருப்பேன்!
பார்வைதன்னும் கிடைத்து விட்டால்
பாரயே வெண்றவன் போலாவேன்!
இன்று கிடைத்தது உன் பார்வை
அன்று பெற்றேன் நான் ஜனித்த பலனை!
பார்த்திருந்தேன் நாளை விடியலுக்காக
போர்த்திருந்தேன் இரவுமுழுதும் போர்வைக்குள்ளே!
கடிதமொண்று தந்து விட்டாய்
படி எல்லாம் தடுமாறி நிலைமாறுதே!
படித்து விட்டேன் உன் கடிதத்தை
முடித்து விட்டாய் என் வாழ்கையை!
கொடுத்து விட்டேன் நீ அண்ணுக்கு எழுதியகடிதத்தை
கொழுந்து விட்டு எரியுதே என் நெஞ்சக்கணல்!
பொறுத்து விட்டேன் நீ
என் அண்ணி என்பதால்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us