திங்கள், நவம்பர் 03, 2008

இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியாவின் நிவாரண உதவிகளை இலங்கை அரசாங்கத்திடம் கொடுப்பதை விட கடலில் கொட்டுவது சிறந்தது

இலங்கைத் தமிழர் பிரச்சி;னை தொடர்பாக இந்திய மத்திய அரசிடம் மேலும் அதிகமான ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்திக்க இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.



இலங்கையில் கடந்த சில மாதங்களாக தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. தமிழர்களின் குடும்பங்கள் காட்டுக்குள் மர நிழல்களில் தங்கியுள்ளனர். இது தொடர்பான குறுந்தகடுகள் தமிழகத்தில் பலருடைய பார்வைக்குக் காட்டப்பட்டுள்ளன.

அக்டோபர் 2-ம் திகதி இந்த பிரச்சினை தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகள் தமிழகத்தில் வேகமடைந்தன.

அக்டோபர் 14-ம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த, மத்திய அரசு அடுத்த 2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தை சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ய நேரிடும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தக் கெடு கடந்த 28-ம் திகதியுடன் முடிந்துள்ள நிலையில் இந்திய, மத்திய அரசின் முயற்சிகள் திருப்தி தரும் வகையில் இருப்பதாகக் கூறிய தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட மாட்டாது என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என தமிழக பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்: தமிழக மக்கள், அரசியல் கட்சிகள், திரைத் துறையினர், வணிகர்கள் என எல்லோரும் தந்த அழுத்தம் காரணமாகத்தான் மத்திய அரசு இதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது என்பது ஆறுதலளிப்பதாக உள்ளது என கூறியுள்ளார்.

தமிழர்களைத் தாக்கினால் யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் இருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு, தற்போது தமிழக மக்களும், இந்திய அரசும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழ்நாட்டில் எழுந்த எண்ணங்களுக்கு இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ பயப்படுவாரா என சிவாஜிலிங்கத்திடம் கேட்டபோது, தற்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அந்த அச்சம் ஏற்பட்டுள்ளது எனவும் இந்த உணர்வு இந்தியா முழுவதும் பரவும்போது மகிந்தவின் தைரியம் குறையும் எனவும் கூறியுள்ளார். இதனால் இலங்கை ஜனாதிபதியின் மனதில் மாற்றங்கள் ஏற்படும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் திரட்டப்படும் உணவு, மருந்துப் பொருள்களும் நிவாரண நிதியும் இலங்கை அரசு மூலமாக அனுப்பப்பட்டால் தமிழர்களுக்கு முழுமையாகக் கிடைக்க வாய்ப்பு இருக்குமா என கேட்டதற்கு, அது சாத்தியமற்றது என சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் திரட்டப்படும் உதவிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள் மூலம் அனுப்பினால் அந்த உதவிகள் தமிழ் மக்களை முழுமையாகச் சென்றடையும் எனவும் இலங்கை அரசாங்கத்திடம் கொடுப்பதை விட கடலில் கொட்டுவதோ அல்லது தீ வைத்துக் கொளுத்திவிடுவதோ சிறந்தது எனக் கூறிய சிவாஜிலிங்கம், இது குறித்த உண்மை நிலைமையை தமிழக அரசுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் விளக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் 1,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இது விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல. அவர்களுடைய தந்திரத்தின் ஒரு பகுதியாகத்தான் இது இருக்கும். தற்போது, ராணுவத்தினரை விடுதலைப்புலிகள் தமது பகுதிக்குள் நுழையவிட்டுள்ளனர். பின்னாளில் என்ன நடக்கும் என்பது தெரியாது. போரில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாக இராணுவம் சார்பில் வெளியிடப்படும் தகவல்கள் பொய்யானவை எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணாதான், காட்டுக்குள் இருக்கும் விடுதலைப்புலிகளின் முகாம்கள் பற்றி இராணுவத்துக்குத் தகவல் சொல்கிறார் என்ற கேள்விக்கு விடையளித்துள்ள சிவாஜிலிங்கம், கிழக்குப் பகுதியில் உள்ள தகவல்கள் மாத்திரமே கருணாவுக்குத் தெரியும் எனவும் அதுவும் பழைய தகவல்களாகத்தான் இருக்கும் எனவும், புதிய மாற்றங்கள் பற்றி கருணாவுக்குத் தெரிய வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திய மத்திய அரசு இன்னும் தீவிர அக்கறை காட்டுவதற்காக, அங்குள்ள நிலையை நேரில் விளக்குவதற்காக இந்திய பிரதமர், காங்கிஸ் தலைவி சோனியா ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவுத் அதற்கான நேரத்தை ஒதுக்கித் தருமாறு கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilskynews.com/

வெள்ளி, அக்டோபர் 31, 2008

தமிழர்களை கொல்பவர்களிடமே மருந்து, உணவுப் பொருட்களை கொடுப்பதைவிட கொடுமையான செயல் உண்டா?: "ஜனசக்தி" நாளேடு கேள்வி

தமிழ்நாட்டின் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள இலங்கைத் தமிழர் நிவாரண நிதி திரட்டல் குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வமான தமிழ் நாளிதழான "ஜனசக்தி" கேள்வி எழுப்பியுள்ளது.

"இக்கட்டான நேரத்தில் உதவிக்கரம நீட்டுவது நமது இன்றியமையாக கடமையாகும்"

"ஈழத்தில் வேதனையால் விழி நீர்பெருக்கி வாடிக் கொண்டிருக்கும் சகோர சகோதரிகளுக்கு தமிழக மக்கள் இயன்றதை வழங்கி உதவிடுவிர்"

"இலங்கைத் தமிழர் நிவாரணை நிதி முதல்வர் கலைஞர் பத்து இலட்சம் ரூபாய் வழங்கினார்"

29.10.08 முரசொலியின் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ள வரிச் செய்திகள்.
இது முதல்வரின் ஏடு. வேண்டுகோளும் முதல்வரால் வெளியிடப்பட்டள்ளது.
கருணை உள்ளம் கொண்டு, கண்ணீர் வடிப்போருக்கு உதவிட முற்படுவதைக் குறைகூறுவதே ஒரு பெருங்குற்றமாகும். ஆனால் இதற்குள் அரசியல் கேள்விகள் அடங்கியுள்ளன.

நாங்களும் - நீங்களும், சகோதர - சகோதரிகளுக்கு உதவி எனும்போது, புலிக்கு உதவி என்பதும் கேட்கிறதா?

தமிழ்நாட்டு மக்கள், இலங்கையில் பிறந்த ஒரே காரணத்தால், பல்லாண்டுகளாக வேட்டையாடப்பட்டு வரும், சகோரதர சகோதரிகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய எப்போதும் தயங்கியதே இல்லை.

விடுதலைப் புலிகள் மீது மட்டும் பாயும் குண்டும், சுடும் துப்பாக்கியும் உண்டா? மக்களைக் கவசமாக பயன்படுத்துவதாகக் கூறுவோர் வானூர்தி குண்டு வீச்சுக்கு கவசம் கண்டு பிடித்துள்ளனரா? அரசியல் நெறி என்ற பெயரால், கொலைகாரர்கட்குத் துணை போகலாமா? இலங்கைத் தமிழர்களான சகோதர - சகோதரிகளுக்கு ஏற்படும் இன்னல்களைத் தடுக்க இந்தியத் தமிழ் மக்கள் நேரில் சென்று உதவிட முடியாது. எனவேதான் தமிழ் மொழி பேசும் இந்தியக் குடிமக்கள் இந்திய அரசிடம் சில வேண்டுகோள்களை முன்வைத்தனர்.

1. சிறிலங்கா அரசிடம் பேசி வானூர்தி தரைப்படைத் தாக்குதலை நிறுத்தச் செய்யுங்கள்.

2. இந்திய அரசு, எங்கள் சகோதர - சகோதரிகளைச் சுட்டுக்கொல்ல, இந்திய அரசு ஆயுதங்களையும், இராணுவ வீரர்களையும் அனுப்புவதை நிறுத்த வேண்டும்.

3. அகதிகளாக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கட்கு இந்திய அரசு நிவாரணப் பொருட்கள் அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தரும் பொருளை அனுப்பி அனுமதி வேண்டும்.

மக்கள் இந்த வேண்டுகோள்களை வைப்பதற்கு முன்பே, மத்திய அரசுக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள 'இக்கட்டான நேரம்' - அதற்குரிய காரணம் தெரியும்.
தெரிந்தும் எந்த முடிவையாவது நடிவடிக்கையாவது எடுத்ததா?

அனைத்து கட்சிக் கூட்டம், அதில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிவில நேரிடும் என்ற எச்சரிக்கைக்கு பின் வெளிவிவகார அமைச்சர், தமிழக முதல்வரைச் சந்தித்துள்ளார்.

போர் நிறுத்தப்படும் என்று கூறவில்லை. குண்டுகள் சுடுகிற வானோடிகளை அனுப்ப மாட்டோம் எனக் கூறவில்லை. மத்திய அரசுக்கு ஆபத்தில்லை என்றே கூறினார்.

எனவே, மத்திய அரசு தானாக மனிதாபிமானத்தால் உந்தப்பட்டு எதையும் செய்யவில்லை. எனவே தான் முதல்வரின் நம்பிக்கை மக்களுக்கு ஏற்படவில்லை.
இப்போது நன்கொடை வசூல், தானம் உதவி என்ற தமிழக முதல்வர் தொடங்கியிருக்கிறார். இவை எப்படி அங்கு போய்ச் சேரும்? யார் இதை அவதிப்பட்ட மக்களுக்கு வழங்குவது?

மத்திய அரசு, சிறிலங்காவுக்கு தொடர்ந்து இராணுவ உதவி செய்வதால், இலங்கைத் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கத துணை புரியும் டில்லியிடம் மன்றாட மக்கள் தயாராக இல்லை. அங்கிருந்து எந்த நற்காரியத்தையும் எதிர்பார்க்க இயலவில்லை.

ஆனால் தமிழக முதல்வரிடம் ஒரே ஒரு வேண்டுகோளுக்கு விடை கேட்கிறோம்.

1. குண்டுத்தாக்குதலை நிறுத்தாமல் இருக்கும்போது அங்கு உதவிப் பொருட்களை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்?

2. சில மாதங்கட்கு முன்னர் திரு.பழ. நெடுமாறன், மருத்துவப் பொருட்களை அனுப்பிட, வசூலித்து வைத்த பின்னர் கேட்டபோது மறுக்கப்ட்டதே. ஏன்? இப்போது எங்கிருந்து வழி பிறந்தது?

3. இலங்கைத் தமிழர்களை கொல்பவர்களிடமே மருந்து, உணவுப் பொருட்களை கொடுப்பதைவிட கொடுமையான செயல் உண்டா? அவர்கள் கையால் தமிழ் மக்கள் வாங்கிச் சாப்பிடுவார்களா?

சர்ச்சைக்கு உட்படாத சமூகத் தலைவர்கள் நேரில் சென்று உணவு உதவி வழங்கிட சிறிலங்கா அரசும் இந்திய அரசும் மறுப்பது ஏன்?

எல்லாவற்றிற்கும் மேலாக குண்டு போட்டுக் கொல்லப்படுவது நிறுத்தப்பட மாட்டாது எனத் திட்டவட்டமாக ராஐபக்ச பிரகடனம் செய்துவிட்ட பிறகு நீங்க்ள கருணையுடன் அனுப்பும் பாலும், பருப்பும், பாகும், சைவ - அசைவ விருந்தாக அமைந்தாலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே சாகத்தானே வேண்டும்.
பட்டினி கிடந்து குண்டடிப்பட்டுச் சாகாதே நன்கு சாப்பிட்டு விட்டு சா என்று கூறுவதாகத்தானே உங்களது அழைப்பு அமைந்துள்ளது.

முதலில் குண்டுப்போரை நிறுத்தச் சொல்லுங்கள். இல்லையேல் இதுவும் கொடை மடம் என்றே வருணிக்கப்ட நேரிடும். மத்திய அரசைக் காப்பதா? இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பதா? என்பதை முதல்வரின் முடிவுக்கே விட்டுவிடலாம்.
இது கட்சியின் கோரிக்கை அல்ல. மக்களின் புலம்பல் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

buthinam.com

சனி, அக்டோபர் 25, 2008

உலகத்தமிழரின் கொந்தழிப்பால் உண்ணாவிரதத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவித்துள்ளார் அஜித்!!!

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜீன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர்.

நேற்று தமிழ்வின் இணையதளத்தில் ஈழத்தமிழருக்காக ஆதரவு வழங்க மறுத்த அஜித் கூறிய இச்செய்தி வெளியான சில மணிநேரங்களில் உலகத்தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த்திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளில் இந்நடிகர்களுக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. "ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு வழங்க மறுத்த நடிகர் அஜீத் நடித்து வெளியாகும் ஏகன் திரைப்படத்தை திரையிட விடமாட்டோம்" என்று கொந்தளித்த ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் சிலவற்றிலும் இறங்கினர். சில இடங்களில் கல்வீச்சு, போஸ்டர் கிழிப்பு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் திட்டமிட்டபடி அக்டோபர் 25 இல் பாரீஸ் நகரில் ஏகன் திரைப்படத்தை வெளியிடமுடியாத சூழல் உண்டாகியுள்ளது.

இவ்வாறு உலகத்தமிழர் ஏகன் திரைப்படத்தை புறக்கணித்ததும் ஏகனை வெற்றிகரமாக திரையிட விரும்பிய, ஈழத்தமிழருக்கு ஆதரவு கொடுக்கமாட்டேன் என முழங்கிய நடிகர் அஜித், ஏதும் செய்ய முடியாத நிலையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்து, “ நடிகர் சங்கம் எடுத்துள்ள உண்ணாவிரத போராட்ட முடிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனவே கட்டாயம் சென்னையில் நவம்பர் 1ம் தேதி நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் நானும் கலந்துகொள்வேன். ஈழத்தில் அப்பாவித்தமிழர்கள் தாக்கப்படுவதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிப்பேன்” என ஈழத்தமிழருக்கு எதிராக பேசிய நடிகர் அஜீத் நக்கீரனுக்கு உறுதி கூறினார்

தமது தல நடித்த ஏகன் வெற்றிகரமாக திரையிட விரும்பிய ரசிகர் மன்றத்தினர் "திரையுலகில் இருக்கும் ஒரு சில விஷமிகள்தான் இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பி உள்ளனர் " என்று கூறி வருகின்றனர்.

http://www.tamilwin.com/view.php?2eIWnp00b...d430QH3b02nLW3e

அர்ஜுனின் மறுப்பு அறிக்கை.
இலங்கைத்தமிழ் மக்களுக்கு என்றும் என்னுடைய ஆதரவு இருக்கும்: அர்ஜுன்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜுன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர் என செய்தி வெளிவந்திருந்தது.

எனினும் அந்த செய்தியடுத்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் கொந்தளிப்பையடுத்தே இன்று அஜித் உனடியாக சில செய்தியூடகங்களுக்கு தான் அந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொள்வேன் என்ற தகவலை வழங்கியிருந்தார்.

அதே நேரம் அர்ஜுன் தமிழ்வின் இணையத்தளத்தை நேரடியாக மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் கடந்த 23 வருடங்களாக வாழ்ந்து வருவதாகவும் தமிழை மிகவும் நேசிப்பதாகவும் இப்படிபட்ட கருத்தை தான் மனதில் கூட நினைந்தது கிடையாது என்றும் குறிப்பாக இலங்கை தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தன்னுடைய ஆதரவு என்றும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அத்தோடு உண்ணாவிரத போராட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ளுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் நேற்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியான செய்தில் வந்த கருத்தை முற்றாக மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நன்றி : தமிழ்வின்

புதன், அக்டோபர் 15, 2008

தி டேஞ்சர்ஸ் ஒஃப் தமிழ் சாவினிஸம்!!! தி ஹிண்டு கட்டுரை.

இந்து நாளிதழுக்கு கண்டனங்கள் !!! இன்றைய தி ஹிந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி எனும் ஊடகவிபசாரி, தமிழீழவிடுதலைப்போராட்டத்தையும் ,அதற்கு ஆதரவான தமிழக மக்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் எழுச்சியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார்...

தலைப்பு........ தி டேஞ்சர்ஸ் ஒஃப் தமிழ் சாவினிஸம் .

ஏழ்மை காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்ணே பல மடங்கு இத்தகைய ஊடக விபசாரிகளை விட மேலானவர்...
இந்து நாளிதழுக்கு கண்டங்கள் அனுப்புவோம் சகோதரர்களே
தமிழன் ஒற்றுமை ஓங்கட்டும் ...தமிழர்கள் ஓரணியில் திரள்வது கண்டு ஓனாய்க்கூட்டம் ஓடட்டும்!!!

மாதிரி வடிவம்
Copy of the latter sent ti Hindu

Dear Edito,
Even though I know your changing positions since 1984. Once you behind Prabaharan then Chandrika and now Mahinda. This is your freedom. Many Sinhalese including some of my friends consider you as anti Tamil. Thy said you support not only killing Sri Lankan Tamil but also Indian Tamil fishermen. Can you show me an article written against the continuous killing of Indian Tamil fishermen by your Sinhalese Friends? This also may be your freedom. But I never expect you to support possible and encourage genocide of my people. Please stop it.If you really respect press freedom please publish this latter.
with regards

youer name

கண்டங்கள் அனுப்ப .... theditor@thehindu.co.in

கட்டுரை இணைப்புhttp://www.hindu.com/2008/10/14/stories/2008101454490800.htm

தமிழீழ விடுதலைப்போராட்டத்தினையும் மாவீரர்களையும் தமிழ்நாட்டுத்தமிழர்களின் தமிழுணர்வையும் இழிவுபடுத்தி இன்று(அக்டோபர் 14) கட்டுரை வெளியிட்ட பாசிச "THE HINDU" பத்திரிக்கையினை கண்டித்து கோயம்பத்தூரில் ஆதித்தமிழர் பேரவையின் வழக்கறிஞர் தோழர் வெண்மணி தலைமையில் 15 க்கும் மேற்பட்ட தமிழின வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு இந்து நாளிதழின் அலுவகம் முன்பு இன்று மதியம் இந்து நாளிதழை தீக்கிரையாக்கி இந்து நாளிதழின் தமிழர் விரோதப்போக்கை கண்டித்து முழக்கமிட்டு கைதானார்கள்.

இணைப்பு - 2

இந்து நாளிதழிழை எரித்த தமிழக தோழர்கள் மாலை 6 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்து நாளிதழிழை எரித்த தோழர்கள் மாலை 6 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டார்கள். மேலும் மதியம் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த அரசு சட்டக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் பெரியார் திராவிடர்கழக மாணவரணி பொறுப்பாளரும் ஆகிய தோழர் ந.பன்னீர்செல்வம் தலைமையில் 2 மணியளவில் மறுபடியும் இந்து அலுவலகம் முன்பாக இந்து நாளிதழின் தமிழின எதிர்ப்பு போக்கை கண்டித்து முழக்கமிட்டு அலுவலகம் முன்பாக நாளிதழை எரித்துக்கைதானார்கள். மாலை 6 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

-- http://www.tamilseythi.com/tamilnaadu/the-...2008-10-14.html

திங்கள், அக்டோபர் 13, 2008

சிறீலங்கா உணவுப்பொருட்களில் கொடிய விஷம், மக்களே கவனம்!!!

சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதியாகும் மன்சி பிஸ்கட் எட்னா சொக்லட்டில் விசப் பொருட்கள்.

சிவிஸ் அரசின் சுகாதரத் துறையால் சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மன்ச்சி பவ் என்னும் பிஸ்கட்டைப் பரிசோதித்த போது அதில் மெலமையின் என்னும் நச்சுப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்படுள்ளது.இந்த நச்சுப்பொருள் உள்ள பாலை உண்டதால் அண்மையில் சீனாவில் பல குழந்தைகள் இறந்துள்ளார்கள்.ஆகவே புலத் தமிழர்கள் சிறிலங்காவில் இருந்து வரும் பிஸ்கட்டுக்கள் சொக்கிளட்டுக்களை தவிர்க்கவும்.

Swiss find melamine in Thai, Sri Lankan biscuits



Last updated: Monday, October 13, 2008 6:45 AM EDT

GENEVA - Swiss authorities say they have found high concentrations of melamine in biscuits from Thailand and Sri Lanka and have called on other European countries to withdraw the products.

Authorities in the canton (state) of Geneva say tests have shown high melamine levels in the Thai biscuits Milk Cookies S&P and the Sri Lankan candies LemonPuff Munchee.

Melamine in milk has been blamed for the deaths of four infants and for sickening more than 54,000 others in mainland China.

The authorities said in a statement Monday that the European distribution channels for the two biscuits have been identified.

They say tests on a dozen baby milk products have shown no melamine contamination.

A service of the Associated Press(AP)

சனி, செப்டம்பர் 13, 2008

சிறீலங்கா அரசின் மின் அஞ்சல் பிரசாரம்.

இன்று சிங்கள மக்களிடையே தினமும் வந்து சேரும் இராணுவத்தினரின் சடலங்களால் அரசும் இராணுவமும் கிலி பிடித்துப் போய் இருக்கிறது. காயப்பட்ட இராணுவத்தால் நிரம்பி வழியும் வைத்திய சாலைகள்.

இறந்த இராணுவத்தினரின் உடல்களால் நிரம்பி வழியும் பிரேத கூடங்களும் இறுதிச் சடங்கு மலர்ச் சாலைகளும் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்து விடுமோ என அஞ்ச வேண்டி உள்ளது.

இந்த நிலை மேலும் அதிகரிக்கும் நிலை அல்லாது குறையும் சாத்தியம் இல்லாத நிலையே தெரிகிறது. இதுவரை புலிகளுக்கு எதிரான போரைச் சொல்லிச் சொல்லியே தேர்தல்களை நடத்தி வயிற்றை வளர்த்து வந்த அரசுக்கு ஆப்பு வைத்து விடுவது போன்று போரின் போக்கு அமைவது தெரிகிறது.

இதனால் அரசின் பாதுகாப்பு அமைச்சின் ஊடகத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவின் புளுகு மூட்டைகள் கள உண்மைகளால் கிழிந்து பஞ்சாகிக் காற்றில் பறக்கின்றன. அதிபர் மகிந்த, பிரமதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம, பசில் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல, லெப். ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோரின் வெறித்தனமான பேச்சுகளால் சிங்கள மக்களின் ஆதரவைத் தக்க வைக்க ஆடிய விளையாட்டு ஆபத்தான கட்டத்தை அடைவது தெரிகிறது. எந்த நேரத்தில் ஆட்டம், ஆட்டங்கண்டு கலையுமோ என நினைக்கத் தோன்றுகிறது.

நடந்து முடிந்த இரண்டு மாகாண சபைத் தேர்தலையும் வெட்டிப் பிரசாரத்தாலும், பேச்சுக்களாலும், ஆயுதக் குழுக்களின் மிரட்டலாலும் வென்றாகி விட்டது. புலிகளும் அரசின் போக்குக்கு விட்டுக் கொடுத்துப் பப்பாசி மரத்திலை ஏத்தி விட்டது போன்று அரசின் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடம் கொடுத்து மல்லாவியில் இராணுவம் புகுந்து படம் பிடித்துத் தனது பரப்புரையால் மாகாண சபையைத் தனதாக்கிக் கொள்ள இடம் கொடுத்து விட்டனர். ஜே.வீ.பீ. யின் நிலை இன்று அணிலை ஏறவிட்டுப் பார்த்து ஏங்கும் நாயின் நிலைக்கு வந்து விட்டது. மொத்தத்தில் கட்சிகளின் கூட்டுகள் இறுக்க நிலை குலைந்து காணப்படுகிறன. எனவே அரசு சிங்கள மக்களின் மனங்களை இறுக்கப் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

சிங்கள மக்களின் போர் வெறிக்குத் தீனி போடுவதற்காக மின் அஞசல்கள் மழைபோல் கணிணிகளை நிரப்புவதில் அரசின் பரப்புரைச் சாதனங்கள் முனைப்புக் காட்டி வருகின்றன. இந்த மின் அஞ்சல்கள் உண்மைக்குப் புறம்பாகவும் நம்பமுடியாத அளவுக்குக் கற்பனை நிறைந்ததாகவும் காணப் படுகின்றன. இவற்றில் ஒன்று அமெரிக்க மாநிலப் புலனாய்வுப் பிரிவு 'FBI சொல்கிறது’ என்ற தலைப்பில் உள்ளது. இலங்கைப் பிரச்சனைக்கும் அமெரிக்க 'FBI க்கும் என்ன தொடர்பு என்று கேட்டு விடாதீர்கள். 'FBI என்றால் கூட ஏதோ அமெரிக்க மத்திய அரசு மூக்கை நுழைக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் மாநில உளவுத் துறை என்றால் 52 மாநிலங்களில் எந்த மாநிலம் என்ற கேள்வி எழுமே. ஆனால், மண்டைக்குள் ஏதும் உள்ளவருக்குத்தான் அந்தக் கேள்வி எழும். இவை மூளை கழுவுப்பட்ட ஜன்மங்களுக்காக எழுதப் படுபவை. எனவே எமது மக்கள் இவை பற்றி அக்கறை கொள்ளாது இருப்பது அவசியம்.

எதற்கும் இந்த 'FBI இவர்களுக்கு என்ன சொல்லி விட்டார்கள் என்பதைச் மிக மிகச் சுருக்கமாக முதலில் தெரிந்து கொள்வோம். இலங்கை இந்து சமுத்திரத்திலே வாழத் துடிக்கும் ஒரு சொர்க்க பூமி. அங்கே அமைதியான, இரக்கம் மிகுந்த, நாகரீகம் மிகுந்த சிங்கள மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் விருந்தாளியாகவோ வெற்றி கொள்பவராகவோ எவர் வந்தாலும் மிக அன்பாய்ப் பழகும் குணம் உள்ளவர்கள். அங்கே எழுதப் பட்ட 2400 வருட வரலாறு கொண்ட 17 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இப்போது எப்படி மின்னஞ்சல் சொல்கிறது என்பதைச் சிறிது பார்ப்போமா?
"There is a tiny Little Island Paradise in the Indian Ocean called SRI LANKA that is trying to survive. They are the home for about 17 million people called the Sinhalese. On this entire planet on 6.6 billion people there are only 17 million Sinhalese and Sri Lanka is their home. Sri Lanka even though a tiny island country has over 2400 years of recorded and written history. There are remains of buildings, structures, paintings that go back to 400 BC. Today the identity of Sri Lanka and its poetic history is in the verge of extinction. Sri Lanka is also a country where the original forms of Buddhism still exist. “

இவர்களுடன் சுமார் 1.5 மில்லியன் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். உங்களுக்கு மேலதிக தகவலாக, உலகில் 112 மில்லியன் தமிழர் ஆதியில் இந்தியாவில் உள்ள தமிழ் நாடு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். தமிழ் நாடு என்றால் தமிழர்களின் தேசம். அதன் நிலப் பரப்பு இலங்கையை விடவும் இரண்டரை மடங்கு பெரியது. இலங்கையின் வரலாற்றுப் படி தென் இந்தியாவில் தமிழ்நாட்டில் வரண்ட ஆனால் மிகப் பெரிய தரித்திரப் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர் கள்ளக் குடியேற்றமாகவும், படை எடுத்தும் பின்னர் அண்மைக் காலத்தில் பிரித்தானியரால் மலிவுக் கூலிகளாய் தேயிலை, கோப்பி, இரப்பர் பெருந்தொட்டங்களில் வேலை செய்ய இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுக் குடியேறியவர்கள். தென்னிந்தியாவையும் அங்குள்ள வாழ்வையும் இப்படிக் கூறுகிறது-

“In addition to the Sinhalese in Sri Lanka, there are about 1.5 million Tamil in Sri Lanka. For your information, there are 112 million Tamil in this planet and they are originally from the Tamil Nadu State in India. Tamil Nadu means Land of the Tamils and the land area is about two and a half times the land area of Sri Lanka. The history of Sri Lanka shows that the Tamil who lived in almost desert-like conditions in Tamil Nadu, which is a dry miserable but very large piece of land in South India came to Sri Lanka as illegal immigrants, invaders and most recently were brought in large numbers as cheap labour by the British to plant tea, coffee and rubber in Sri Lanka.”

சிறி லங்காவும் தென்னிந்தியாவில் தமிழ் நாடும் இடையில் 35 மைல் அகலக் கடலால் பிரிக்கப் பட்டுள்ளது. இந்திய அரசும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் நாட்டைப் பிரிப்பதைக் கனவிலும் விரும்பாது. தமிழ் நாட்டோடு அது சோமாலியா போன்று மில்லியன் கணக்கில் பட்டினியாகவும், படிப்பின்றியும் வாழ்வதற்காக எங்கேயும் ஓடிப் போகும் மனம் படைத்தவர்களோடு ஒப்பிடும் போது இலங்கை ஒரு சிறிய சொர்க்கத் தீவு. பெரும்பாலானவர் சிங்களவர் பெரும் பகுதியினர் அகிம்சையிலும் விருந்தோம்பலிலும் நம்பிக்கை கொண்ட பௌத்தர்கள். வந்தவர்கள் விருந்தினரோ, வெற்றி கொண்டவரோ, கள்ளரோ கொள்ளையரோ அல்லது பிரித்தானியரால் கொண்டு வரப்பட்ட மலிவான கூலியோ அவர்களை வரவேற்றவர் நாம்.

ஆனால் இன்று சிலர் தம்மைப் புலிகள் எனக் கூறிக் கொண்டு முழு சிறி லங்காவையும் வசப்படுத்தத் தீர்மானித்து விட்டனர். அப்படி அவர்கள் தமிழீழம் என்ற பெயரில் உருவாக்கத் தீர்மானித்து விட்டார்கள். அவர்கள் போகும் வேகத்தில் அழிவுகளும் இன அழிப்பும் பார்த்து நாம் அமைதியாய் இருந்தால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். அவர்கள் சிங்களவர்கள் மீது 30 வருடங்களுக்கு முன்பே போர் தொடக்கி விட்டார்கள்.

“Compared to Tamil Nadu which is like Somalia where among the people, millions are starving, illiterate and would run away to anywhere to live - Sri Lanka is a little Island Paradise. Sri Lanka's majority population, the Sinhalese most of them Buddhist, believe in non-violence and hospitality welcomed the visitors when they came, whether they came as conquerors, bandits, pirates or as cheap labour for the British. But today some of these visitors calling themselves Tamil Tigers have decided to occupy the entire island of Sri Lanka and have decided to create a Tamil Homeland called TAMIL EELAM. At the rate they have been going and the carnage and genocide they have been carrying out, if all of us keep quiet they might succeed. They have declared war on the Sinhalese 30 years ago.“

இந்த 30 வருடத்தில் அவர்கள் 70,000 சிங்களவரைப் பலி எடுத்துவிட்டார்கள். தமிழ் நாட்டை எதிர்த்த ராஜீவ் காந்தி, பிரேமதாசா இன்னும் பல அரசியல் வாதிகளைக் கொன்று விட்டார்கள். இப்படிப் புலம்பித் தீர்க்கிறது இந்த மின் அஞ்சல். இதில் காணப்படும் எவையும் அமெரிக்கா சம்பந்தப் பட்ட விடயமே இல்லை. அப்படி இருக்க இது வெளிநாடுகளில் வாழும் சிங்களவரின் கொம்பு சீவும் வேலையாகத் தெரிகிறது. அதே நேரம் ஏனைய மக்களின் அனுதாபத்தைப் பெற்று எமது தமிழீழக் கோரிக்கைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதே இதன் நோக்கமாகத் தெரிகிறது.

இதே வேளையில் சிங்களத்தின் பார்வையில் தமிழ் நாடு சோமாலியா போலவும், தமிழ் மக்கள் பட்டினியால் வாடி வாழ வழிதேடி எங்கேயும் போகக் கூடியவர்கள் என்பதும் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பது உறுதியாகிறது.

இலங்கையில் உள்ள மக்கள் இனங்களில் சிங்களவர்களே மிகவும் சோம்பேறிக் குணம் கொண்டவர்களும் உழைப்பின்றக் கிடைக்கும் மரவள்ளிக் கிழங்கும், பலாக்காயும் உண்டு வாழும் குணம் படைத்தவர்கள் என்பதும் இலவச அரிசி வழங்கப்பட ஆரம்பித்த 1950 வரை மிக அரிதாகவே சோறு உண்டு வாழ்ந்தவர்கள் என்பதையும் இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க நியாயமில்லை. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் கடின உழைப்பாலும் உயர் கல்வியாலும் பணமும் பதவியும் பெற்று உயர்வடைந்த சமூகங்களான இந்திய மற்றும் இஸ்லாமிய வரத்தகர்களின் வளமான வாழ்வு கண்டு பொறாமைத் தீயால் நாட்டை அழித்த வரலாறு சிங்களவர்களுடையது.

தமிழ் மக்களின் கல்வி அறிவும் அரச பதவிகளும் கண்டு பொறாமை கொண்டு சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக்கி தமிழரின் தொழில் வாய்ப்பைப் பறித்ததும், தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவரின் உயர் கல்வியைப் பறித்து நாட்டைப் படு பாதாளத்துக்கு எடுத்துச் சென்றவரும் சிங்களவரே.

1956, 1958, 1967, 1961, 1970, 1977, 1983 எனத் தொடர்ச்சியாக காடையரைக் கொண்டும் அரச படைகளைக் கொண்டும் தமிழ் மக்களின் உயிர் உடமைகளைப் பறித்து உயிரோடு அப்பாவித் தமிழ்ப் பொது மக்களை குழந்தைகள் பெண்கள் முதல் வயதானவர் நோயாளிகள் எனப் பாகுபாடின்றி தர்க்கிய பெருமையும் இந்தப் பொறுமையும் பெருந்தன்மையும் கொண்டுள்ள சிங்கள இனத்தால் மேற்கொள்ளப் பட்டது என்பதையும் மறந்து விட்டவர்களாக இருக்கலாம். ஆனாலும் சிங்கள இனம் வன்முறைகளற்ற விருந்தோம்பல் குணம் கொண்டவர்கள் என்கிறார்கள். 1956 ஜூன் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தின் முன்னால் சத்தியாக்கிரகம் இருந்த தாமிழர்களை ஏன் அடித்துக் காயப்படுத்தி கடல் ஏரிக்குள் எறிந்தார்கள் என்ற கேள்விக்கு யார் பதில் தருவார்? 1961 இல் வடக்கு கிழக்கு அரச அதிபர்கள் அலுவலகம் முன்னால் சத்தியாக் கிரகமும் சட்ட மறுப்பும் செய்த ஆயுதம் தரிக்காத தமிழ் பொது மக்களை இராணுவம் ஏன் அடித்து விரட்டியது? நியாயமாகப் பார்க்கப் போனால் இவற்றை அரசு, காவல் துறை மற்றும் நீதி மன்றம் மூலமாக அல்லவோ அணுகி இருக்க வேண்டும்? இத்தகைய அராஜக ஆட்சிதான் இவர்களின் அரசியல் நாகரிகமா?

ஆய்வு: நிலவரம் பத்திரிகைக்காக எதிர்மறைசிங்கம்

இதோ அவர்களின் நாகரிக முகம் எப்படி இருக்கிறது எனப் பாருங்கள.; “உங்களிடையே தமிழர்கள் இருப்பீர்கள். பெரும் பாலானவர்கள் நல்லவர்கள். கெட்டவர்கள்தான் இலங்கையில் சிங்களவரைக் கொல்ல பணம் சேர்க்க முயல்வது அல்லது தர்ம ஒன்று கூடல்கள் மூலம் பணம் சேர்த்து உதவுவது. நீங்கள் ஒரு நாகரிக உலகில் வாழ விரும்புகிறீர்களா அல்லது கொலையாளிகளுக்குக் கொடுக்கப் போகிறீர்களா? சிறி லங்கா அரசு கடந்த 30 வருடங்களாக முக்கியமான ஆனால் அசிங்கமான போருக்கு இடம் கொடுத்து முடிவில் தமிழ்ப் புலிகளுடன் போராடுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் ஒரு முடிவைக் காணும் நிலையில் உள்ளனர். ஆனால் நாம் எல்லாரும் எதுவும் செய்யாது பார்த்துக் கொண்டிருந்தால் நாளைக்கு சிறி லங்கா எனப்படும் தீவே இருக்காது. சிங்கள இனம் முற்றாக அழிந்து விடும். இந்த அமைதியை விரும்பும் மக்களை நீடித்து இருக்க உதவுங்கள்.
“Among you there will be Tamil. Most of them are good. The bad ones are those who collect or try to collect money by organizing charities, rallies and such from you and these funds are to kill the Sinhalese in Sri Lanka. Do we want to live in a civilized world or do we want to give in to murderers? The Sri Lankan Government has tried after 30 years of giving in to the superior but dirty war of the Tamil Tigers to finally fight them. Over the past two years they have made some break through. But if all us sit and watch tomorrow there will not be a little Island called Sri Lanka. The Sinhalese will be extinct. Help these peace loving people to exist. “

இவற்றைப் படிக்கும் போது இந்தப் பூனையும் பால் குடிக்குமா எனக் கேட்கத் தோன்றுகிறதா? இதைத்தான் காரியத்தில் முந்துவது என்பது. களவு எடுத்தவனே களவு கொடுத்தவனோடு சேர்ந்து கள்ளனைத் தேடுவது என்பது. தமிழன் ஏமாளியாக இருந்தால் சிங்களவன் இதுவும் சொல்வான் செய்வான்! இன்னமும் சொல்வான் செய்வான்! அமைதிப் பேச்சுக் காலமோ அட்டகாசம். போர்க் காலமோ எங்கேயும் எப்போதும் கொல்பவன் சிங்களவனும் அவனுடைய நண்பர்களும். கொல்லப்படுவது தமிழனும் தமிழனின் நண்பர்களும்தான். இதிலும் ஒரு சிறு மாற்றமும் உள்ளது. தமிழனுக்கு உதவ வேண்டாம், மனித நேயம,; அரசியல் அமைதித் தீர்வு, அரசியல் நாகரிகம் பற்றி அமெரிக்கா கூடப் பேசமுடியாது. அப்படிப் பேசினால் அமெரிக்கனையும் தமிழ்ப் புலி எனச் சிங்களம் முத்திரை குத்திவிடும் நிலை எவரும் அறிந்ததே. அப்படியான கல்லிலா நார் உரிக்க முடியும்? போர் என்ற மொழி ஒன்றைத் தவிர வேறு எந்த மொழியும் சிங்களத்துக்குப் புரியாது. இப்படியான நிலையில் பூனையின் தோழனாக இருக்கிற இந்தியா தமிழன் என்ற பாலுக்குப் பாதுகாப்பான காவல் என சில புத்தி ஜீவிகள் பேசுவது வியப்பாய் உள்ளது.

இன்னொரு மின்னஞ்சல் தமிழ் மக்களை மிரட்டும் விதத்தில் இராணுவம் மன்னார், முகமாலை, ஜனகபுரத்தில் புலிகளை அழித்து விட்டதாகப் பல கோரமான படங்களைப் பிரசுரித்து ஸ்ரீலங்கா இராணுவத்துடன் மோதினால் இதுதான் முடிவு என எச்சரித்துப் பயமுறுத்தும் வகையில் உள்ளது. இப்படங்களில் பல அப்பாவி மக்கள் பலியாக்கப் பட்டள்ளது போன்று காணப் படுகிறது. இவற்றில் பல காணாமல் போனவர்கள் பயன் படுத்தப் பட்டிருக்கலாம் என நினைக்க வேண்டியும் உள்ளது. ஏனென்றால் இலங்கை அரசும் அதன் இராணுவமும் எத்தகைய கொடுமையையும் தமிழரை வைத்து நடத்தி முடிக்கும் பாரம்பரியம் கொண்டது. எனவேதான் ஆதாரம் இல்லாத போதும் இப்படி நினைக்கத் தோன்றுகிறது.

மேலும் பல சிறுவர்களைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிடித்தோம் எனக் காட்டப் பட்டடிருக்கிறது. ஆனால் சில படங்கள் அகதிகள் முகாம்களில் இருந்த சிறுவர்களை வைத்து எடுக்கப் பட்டவை போன்று படத்தின் பின்னணிகள் காட்டி விடுகின்றன. மேலும் ஏனைய கூலிக் குழுக்களின் சிறுவர் படையும் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.
அதிலிருந்து இரண்டு படங்களை இங்கே உங்கள் பார்வைக்காகத் தரப் படுகிறது.

இப்படி எல்லாம் மசாலா பண்ணி வந்துள்ளது அடுத்த மின்னஞ்சல்.

மற்றும் ஒன்று 04.09.08 திகதியிட்டு “ கடந்த இரு வாரங்கள் - மன்னார் ஜனகபுர நாகர் கோயில் முகமாலை’’, என்ற தலைப்பில் வந்துள்ளது. இந்த இடங்களில் நடந்த போர் முனைகளில் இடம்பெற்ற மரணங்களைக் காட்டுவதாகக் கோரமான படங்கள் கொண்டு வந்துள்ளது. புலிகளின் கட்டுப் பாட்டிலுள்ள பகுதிகளை கட்டம் கட்டமாக artikel_email.jpgமீட்டுவிட்டதாக இறுதியில் ஒரு மிகச் சிறிய பகுதியே புலிகள் வசம் உள்ளதாகப் படங்கள் போட்டுக் கூறுகிறது. இலங்கை இராணுவம் அதி சிறந்தது. அந்தச் சிறந்ததுடன் மோதி மற்றவர் போல இறந்துவிடு என்று மிரட்டுகிறது. இந்த மின்னஞ்சல்கள் போன்று மேலும் உங்களுக்கும் வந்திருக்கும் இனியும் வரும். இவை வழக்கம் போல் அரசின் பொய்ப் பிரச்சாரங்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுவது அவசியம். இப்போது சில நாட்களாக இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக வாங்கும் அடிகளையும் அழிவுகள் இழப்புகளையும் பார்க்கும் போது அரசின் அவல நிலை தெரிகிறது.
அண்மைக் காலங்களில் இடம்பெறும் கள நிலைமைகள் சிங்களத்துக்கு இவை போன்ற பிரச்சாரம் அவசியம் என்பதையே காட்டுகிறது. எனவே அவற்றை நாம் கவனத்தில் எடுத்து அவை தரும் விடையங்கள் பற்றிக் கவலைப் படாமல் வன்னியில் இடம் பெயர்ந்து அல்லல் படும் எமது உறவுகளுக்கு அவசியமான உதவிகள் செய்ய வேண்டியது கட்டாய தேவை. இதனைக் கவனத்தில் எடுத்து உடனடியாக எமது அதிக பட்ச பொருள் உதவியை தமிழர் புனர் வாழ்வுக் கழகம், வெண்புறா இயக்கம், செடொட் நிறுவனங்கள் மூலமாக எமது உறவுகளின் உயிர்காக்க உதவுவோமாக.

நன்றி:-swissmurasam

திங்கள், செப்டம்பர் 01, 2008

வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வர வேண்டும்.

காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும், மூப்பனாருக்கும், நெடுஞ்செழியனுக்கும் துரோகம் இழைத்தவர் முதல்வர் கருணாநிதி தான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதியை விமர்சித்து நெடுமாறன் கட்டுரை எழுதியிருந்தார். இதற்குப் பதிலாக கவிதை மூலம் நெடுமாறனை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் கருணாநிதி. அதற்கு விளக்கம் அளிப்பதாக குறிப்பிட்டு நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, முதல்வர் கருணாநிதி அடுத்தமுறை, தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற திராணியின்றி தனிப்பட்ட முறையில் மிகக் கீழ்த்தரமாக வசை புராணம் பாடியிருக்கிறார்.

அவர் தரத்திற்கு நானும் இறங்கி பதிலடி கொடுக்க விரும்பவில்லை. எனினும் அவர் கூறியுள்ள அப்பட்டமான பொய்களுக்குப் பதில் கூற வேண்டியது அவசியம் ஆகும்.

பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி.

1969ஆம் ஆண்டில் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும், இது பாராளுமன்றத் தொகுதியல்ல, இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.

அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவரும், அரியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவரும் கருணாநிதியே.

1996ஆம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்தபோது அவருக்

குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவ கவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.

மேலும் 1983ஆம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி ஆனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்து கரைக்கு கொண்டு வந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி.

பொய்யும் புரட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வர வேண்டும்.
நன்றி:- வீரகேசரி நாளேடு 8/31/2008

வெள்ளி, ஆகஸ்ட் 29, 2008

தரித்து நின்ற ரயிலுக்கு குறுக்கே, தலைவைத்து படுப்பதுதான் வீரம்!!!

கஞ்சிக்கும் வழியில்லாது அல்லாடிய
மு மகனுக்கு
வயிற்று பிழைப்பிடமாய் போனதன்று
திராவிடர் கழகம்

ஓசியிலேயே தின்று
தகாத பெண்களிடம் உறவுகொண்டு
உடன் பிறப்பே என போலியாக உச்சரித்த
அடுக்கு மொழி அலம்பல்லெல்லாம்
மேடை பேச்சானது அங்கு

கொழுப்பெடுத்த கூட்டத்திற்கு
அரசபதவி ஆசைபிறந்தது
அந்நேரம் பார்த்து
காங்கிரசில் தமிழர் கடுப்பாயிருந்தனர்

திக திமுகவானது
அவலப்பட்ட மக்களிற்கு
ஆசைவார்த்தை கூறி
அரசணையில் அமர்ந்தனர் சுலுவாய்

அண்ணா அமரர்ராக
நாவலருக்கு நடுமுதுகில் குத்திவிட்டு
தலைமைபதவியை தனதாக்கிய
குள்ளநரியொன்று
மானதமிழனுக்கு சுக்கிரீவன் பட்டமிங்கு கொடுக்கிறது

தரித்து நின்ற ரயிலுக்கு குறுக்கே
தலைவைத்து படுப்பதுதான் வீரமென்றும்
இந்திக்கு தார்பூசிய இளவல் தானென்று
வெட்டி வீரம் பேசிய
அட்டைகத்தி வீரர் இவர்

இந்திரா கொடுத்த சிறையை மறந்து
நேருவின் மகளே வருக
நிலையான ஆட்சிதருக
என ஊளையிட்ட ஓநாய்
மறத்தமிழனை சந்தர்பவாதியென்று
சகுனியாய் பேசுதிங்கு

எம்ஜிஆர் இருக்கும் வரை எதுவும் கிடையாது
முடங்கிய முதலைக்கு
அவரின் மறைவு அதிஸ்ரமாக அமைந்தது
அது தமிழனுக்கு அட்டமத்து சனியாக போனாது

காட்டி கொடுப்பதே காங்கிரஸின் தகுதியென்பது
தமிழர் நன்கறிவர்
அந்த வழியில் வந்த மூப்னாரும் குமரி அனந்தனும்
குத்துவிளக்காய் தெரியுதிங்கே
ஐயகோ கேளுமய்யா இந்த அநியாயத்தை

பரம்பரைக்கு பணத்துடன் பதவி சேர்க்க
சோனியாவின் சேலையில் தொங்குமொரு துஸ்டன்
துணிந்து பாக்கு நீரிணை கடந்த
மறத்தமிழன் மாறன் ஐயாவை தூற்றுதிங்கே

தமிழக மீனவரை நடுக்கடலில் தவிக்கவிட்ட
காவிரியாற்றை காயவிட்ட
ஓகனேக்கல் தமிழனை தாகத்தில்தவிக்கவிட்ட
சகுனியினதும் கூனியினதும் கூட்டுக்கலவை யொன்று
இனமான தமிழனை
இழித்து கரிச்சு கொட்டுது
தன் காழ்புணர்வை காட்டுது

மூப்படைந்த போதும் முழுமைபெறாத
தன்ளாத வயதிலும் பதவி மோகம் தணியாத
காங்கிரசின் கைக்கூலியொன்று
நாரயணனுடன் சேர்ந்து
தமிழனை படுகுழியில் தள்ளுதிங்கு

காங்கிரசும் அதன் கைக்கூலியும்
தமிழினத்திலுள்ள கருப்பாடுகள்
துரோகத்தின் மறுபெயர் இவர்கள் நாமம்
தமிழரை பிடித்த தரித்திரங்கள்.

தமிழரின் சரித்திரத்தில்
எட்டபனின் வாரிசுகள் இவர்களென
தமிழினம் இகழும்
காறி உமிழும்
,,,,,,,,,,,,,,,
நன்றி:-பதிவு செய்தவர்: தமிழன் பதிவு செய்தது: 27 Aug 2008 08:34 pm

திங்கள், மே 26, 2008

யாரு சூப்பர் ஸ்டாரு?

இவருதான் சூப்பர் ஸ்டாரு

புதன், மே 07, 2008

குளிர்ந்த தேனீர் (ஜஸ் ரீ/ரே) தயாரிக்கும் முறை.




தேவையான பொருட்கள்

10 லீற்றர் தண்ணீர்
6 சித்திரோன்(மஞ்சள் எலுமிச்சை)
6 லெமன் ( பச்சை எலுமிச்சை)
6 ஒறேன்ஞ்( சாத்துக்குடி/ஒறேன்ஞ் தோடம்பழம்)
சிறிதளவு மின்ஸ் இலை
10 லீற்ற தண்ணீருக்கு தேள்வையான அளவு தேயிலை தூள்.
500 g சீனி/சர்கரை.

செய்முறை
முதலில் சித்திரோன்,லெமன்,ஒறேன்ஞ் மூண்றினது தோலையும் சீவி, துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் இட்டு, நன்று கசக்கவும். இத்தோடு மின்ஸ் இலையையும் துண்டாக நறுக்கி கசக்கவும்.

தண்ணீரை அடுப்பில் வைத்து நன்று கொதிக்கவைக்கவும், கொதித்தவுடன் தேயிலை தூளை போட்டு, சீனியுடன் கலக்கவும், சாயம் இறங்கியபின்னர் வடித்து, பழங்களை கசக்கிவைத்த பத்தித்திரத்துக்குள் கொதிக்க கொதிக்க ஊற்றவும், சிறிது நேரத்தின் பின் அதனை மீண்டும் வடித்து, ஜஸ்துண்டுகளைபோட்டு குளிர்சாதனபெட்டியில் வைக்கவும், குளிர்ந்த பின் குடிக்கவும்.

உற்சாக நடனத்தின் பின்னர் இதை குடிக்க நன்றாக இருக்கும், வெயிற்காலத்துக்கு ஏற்ற அருமையான பாணம்.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us