ஞாயிறு, ஜூன் 10, 2007

அமெரிக்காவில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரிக்கும் பிரசுரங்கள!




நியூயோர்க்,
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரித்ததாக கட்டுரை வெளியாகி இருந்தது அந்த நாட்டில் வசிக்கும் இந்துக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஸ்டப் என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரைக்காக வரையப்பட்ட சித்திரத்தில் இந்து மத கடவுளான பிள்ளையார் ஒரு மதுபான போத்தலை ஒவ்வொரு கையிலும் வைத்து இருப்பதுபோல வரையப்பட்டு இருந்தது. இன்னொரு படத்தில் அனுமானை ஆபாசமாக வரைந்து இருந்தனர். இந்தப் படங்களை அந்த பத்திரிகைக்காக ஜோன்சன் ஜோன்சஸ்டன் என்ற ஓவியர் என்பவர் வரைந்திருந்தார்.

இதை பார்த்ததும் அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் விசனமடைந்துள்ளனர். அவர்களில் நானு மகேந்துரு என்பவர் தன் எதிர்ப்பை அந்த பத்திரிகையின் ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

இந்து மத தெய்வங்களை இழிவுபடுத்துவது எங்கள் மனதை புண்படுத்துவதாகவும், இதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதற்கு பத்திரிகை ஆசிரியர் பத்திரிகை முழுவதும் அடித்து வெளியாகிவிட்டது என்று கூறியதோடு முடித்துக் கொண்டார். அவர் வருத்தம் தெரிவிப்பதற்கு கூட முன்வரவில்லை. இது எங்கள் படைப்பு. இதற்காக நீங்கள் ஏன் வருந்துகிறீர்கள் என்பது போல அவரது பேச்சின் தோரணை இருந்ததாக நானு மகேந்துரு கூறியுள்ளார்.

இதற்கிடையில் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் டொன் போவாவுக்கு ஸ்நேகல் அவிச்சல் எழுதி உள்ள கடிதத்தில் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்துக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள்.


தினக்குரல் இல் இருந்து....

1 கருத்து:

selventhiran சொன்னது…

ஏன் அவர்களுக்கு இந்த வேலை.. இச்செயல் வன்மையாக கண்டிக்கபடவேண்டியது.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us