செவ்வாய், மே 15, 2007

கலைஞர் கருனாநிதி விடுத்த எச்சரிக்கை!!!

சென்னை: ""இந்திய ஒருமைப்பாட்டை கெடுக்கக் கூடாது என்பதற்காக அமைதியாக உள்ளோம்,'' என்று முதல்வர் கருணாநிதி கடுமையாக எச்சரித்தார்.

காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு விவகாரங்கள் தொடர்பாக சட்டசபையில் உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்னைக்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: "மூக்குள்ள வரை சளி இருந்து தான் தீரும்' என கிராமத்தில் சொல்வது போல தமிழகத்துக்கு தண்ணீர் பிரச்னை உள்ளது. நம்மைச் சுற்றி உள்ள மாநிலங்கள் உயரத்தில் இருப்பதால் தாழ்வான பகுதியில் உள்ள நம்மை எந்த அளவு கொடுமைப்படுத்த முடியுமோ அந்த அளவு கொடுமைப்படுத்தி வருகின்றன. எத்தனையோ முறை பேச்சுவார்த்தை நடத்தி அலுத்துவிட்டது. 1968ம் ஆண்டு காவிரி பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் துவங்கிய நான் இன்னும் நடத்திக் கொண்டிருக்கிறேன். இறுதித் தீர்ப்பு வெளியாகியும் அது இறுதியான தீர்ப்பா என்ற பிரச்னை தற்போது உள்ளது.

நாட்டுப் பிரிவினை கேட்ட நாங்கள் அதை துõக்கி எறிந்து விட்டு இந்திய ஒருமைப்பாட்டை நிலைநாட்ட பாடுபடுகிறோம். அந்த நம்பிக்கை வெற்றி பெற மற்ற மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும். இப்பிரச்னைகள் குறித்து டில்லியில் பேசிய போது, நதிகளை இணைப்பதன் மூலம் தான் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளை தீர்க்க முடியும் என்றேன். தற்போது கூட பொன்விழா கூட்டத்தில் நதிகள் இணைப்பு குறித்து கோரிக்கை வைத்தேன். அப்போது பிரதமர் டில்லி வரும் போது இதுபற்றி பேசலாம் என்றார். இம்மாதம் அதற்காக டில்லி செல்வேன். தேசிய நதிகளை கூட முதலில் இணைக்க வேண்டாம். ஆங்காங்கு உள்ள நதிகளை, குறிப்பாக நமது தீபகற்பத்தில் உள்ள நதிகளை இணைத்தாலே தாகம் தீர்ந்துவிடும், நமது தண்ணீர் தேவையும் தீரும். தேவகவுடா பிரதமராக இருந்த போதே காவிரி பிரச்னை தீர்ந்திருக்க வேண்டும். இதற்காக டில்லி சென்றிருந்த போது, தேவகவுடாவுடன் பேசினேன். அங்குள்ள கர்நாடகா பவனில் கர்நாடகா முதல்வர் பாட்டீலுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக தொடர்ந்தது. கடைசியில் கையெழுத்து போடும் கட்டத்தில் பிரதமர் தேவகவுடா அழைப்பதாக தகவல் வந்தது. தேவகவுடா கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் திடுக்கிட்டுப் போனோம்.

தேவகவுடாவை சென்று சந்தித்த போது, தனக்கு புது யோசனை வந்திருப்பதாகவும், அனைவரும் சுகம் பெற பிரமாண்டமான திட்டம் மேகதுõது திட்டம் என்றார். ஒகேனக்கல் பகுதியில் மேகதுõது திட்டம் அமைத்தால் அங்கு மழை நீரை தேக்கினாலே தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொன்னார். இதன்மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதை ஒத்திவைத்தார். பின்னர் பலமுறை பேசியாகி விட்டது. பாலாறு பிரச்னையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. முல்லை பெரியாறு பிரச்னை கேரளாவின் போக்கை பொறுத்து உள்ளது. இனி ஒவ்வொரு மாநிலத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி பயன் இருப்பதாக தெரியவில்லை. இதை உணர்ந்து மத்திய அரசு திரும்பி பார்க்கும் என்றும் தெரியவில்லை. எங்காவது தகராறு நடந்தால் தான் திரும்பிப் பார்ப்பார்கள். இந்திய ஒருமைப்பாட்டை கெடுக்கக் கூடாது என்பதற்காக அமைதியாக உள்ளோம். அப்படி திரும்பி பார்க்க வைக்க முடியும். ஆனால், நமது நல்லெண்ணத்தை அனைத்து மாநிலங்களும் உணர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக தியாகம் செய்ய முன்வர வேண்டும். நாம் தண்ணீர் தான் கேட்கிறோம். நம்மிடம் நிலவளம் இல்லை. நீர்வளம் இல்லை. மன வளம் தான் உள்ளது. நீர்வளம் இல்லாத மாநிலத்துக்கு மற்ற மாநிலங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்விஷயத்தில் மத்திய அரசு சிந்தித்து நல்ல முடிவை காண வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

எம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.5 ஆயிரம் வாகனப்படி: எம்.எல்.ஏ.,க்களுக்கு வாகனப் படியாக மாதம் ரூ.ஐந்தாயிரம் வழங்கப்படுமென முதல்வர் அறிவித்தார். இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி கூறும்போது, ""நமது எம்.எல்.ஏ.,க்களுக்கு நிதியமைச்சர் அதிகமாகவே சலுகைகளை கொடுத்துவிட்டார். இருந்தாலும் இன்னும் ஆர்வமாக உள்ளனர். அன்புத் தொல்லை கொடுக்கின்றனர். எனவே, பொன்விழாவை முன்னிட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் வாகனப் படியாக மாதம் ரூ.ஐந்தாயிரம் வழங்கப்படும்,'' என்றார்.
நன்றி>தினமலர்

கருத்துகள் இல்லை:

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us